Published:Updated:

என்னாது, பப்ஜி மதனின் AUDI A6 சொகுசு கார் இல்லையா... அப்ப சொகுசு கார் என்றால் என்ன தெரியுமா மக்களே?

Luxury Car | சொகுசு கார்

''எங்ககிட்ட சொகுசு கார் இல்லை; ஆடி கார்தான் இருக்கு!’’ - பப்ஜி மதன் மனைவி கிருத்திகா. ஆடிப் போன ஆடி பிரியர்கள்!

என்னாது, பப்ஜி மதனின் AUDI A6 சொகுசு கார் இல்லையா... அப்ப சொகுசு கார் என்றால் என்ன தெரியுமா மக்களே?

''எங்ககிட்ட சொகுசு கார் இல்லை; ஆடி கார்தான் இருக்கு!’’ - பப்ஜி மதன் மனைவி கிருத்திகா. ஆடிப் போன ஆடி பிரியர்கள்!

Published:Updated:
Luxury Car | சொகுசு கார்
ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கே தெரியாத ஒரு விஷயம் – இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆம்... ஆடி கார் சொகுசு கார் லிஸ்ட்டில் இல்லை என்பதுதான் அது.

லேட்டஸ்ட்டாக மீடியாக்கள் முன்பு வருமானம் இல்லை என அழுத பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, ‘‘எங்ககிட்ட சொகுசு கார்கள் இருக்குனு ஒரு புகார் இருக்கு. அப்படி ஏதும் ப்ரூஃப் இருந்தா யாராச்சும் சொல்லுங்க. எங்ககிட்ட இருக்கிறது ஒரு சாதாரண ஆடி A6 கார் மட்டும்தான். சொகுசு கார்கள் எங்க பேர்ல இல்லை!’’ என்று சொன்னதில் ஆட்டோமொபைல் பிரியர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

மதனின் மனைவி கிருத்திகா
மதனின் மனைவி கிருத்திகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை லக்ஸூரி கார் பிசினஸில் மூன்றே மூன்று நிறுவனங்கள்தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ – இந்த மூன்றும்தான் கிங் ஆஃப் லக்ஸூரி கார்கள். இதைத் தாண்டி ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லி, லேண்ட்ரோவர் போன்ற கார்கள் உண்டுதான். ஆனால், கோடீஸ்வரர்கள் வாங்குவதைத் தாண்டி சுமாரான லட்சாதிபதிகள் வாங்கக்கூடிய கார்களாக ஆடி கார்கள் இருப்பதைத்தான் கிருத்திகா சுட்டிக் காட்டியிருக்கிறார்போல! (அவ்வ்வ்!)

Audi A6
Audi A6

நிஜம்தான்; விலை மட்டுமே ஒரு காரை சொகுசு கார் கேட்டகிரியில் கொண்டு வந்துவிடாது. உதாரணத்துக்கு, டொயோட்டாவை எடுத்துக் கொள்வோம். இதில் ஃபார்ச்சூனர், இனோவா க்ரிஸ்ட்டா, கேம்ரி எனப் பல கார்கள் உண்டு. ஆனால், இதில் எதையுமே சொகுசு கார் வரிசையில் சேர்க்க முடியாது. இதை டொயோட்டாவே ஒப்புக் கொள்ளும். இதில் வெல்ஃபயர் எனும் வேன்தான் சொகுசு கார். ஆம், சொகுசு கார் என்பது காராக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேனாக இருக்கலாம்; 4 மீட்டருக்கு மேற்பட்ட செடானாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை; மினிகூப்பர் போன்ற ஹேட்ச்பேக்காகவும் இருக்கலாம்.

Bentley Macallan X
Bentley Macallan X

முதலில் ஒரு சொகுசு காருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்... லக்ஸூரி கார் என்றால் என்ன?

1. முதலில் கம்ஃபர்ட்… அதாவது சொகுசு. உட்காரும் சீட்டில் இருந்துதான் இது ஆரம்பிக்கும். இடவசதியில் ஆரம்பித்து, மசாஜ் சீட்டர் இருக்க வேண்டும்; டிரைவருக்கு மெமரி சீட் இருக்க வேண்டும்; வெயிலிலும் வியர்க்காமல் இருக்க வென்டிலேட்டட் சீட் இருக்க வேண்டும். மொத்தத்தில் பின் பக்கப் பயணிகள், வீட்டில் ஈஸி சேரில் அமர்வதைப் போன்ற சொகுசு இருந்தால் அது சொகுசு கார்.

2. பாதுகாப்பிலும் தொழில்நுட்பத்திலும் வேற லெவலில் இருந்தால் அது சொகுசு கார். உதாரணத்துக்கு, தானாக பிரேக் பிடிக்கும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், ஏகப்பட்ட காற்றுப் பைகள், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி, 360 டிகிரி கேமரா, டிரைவரைக் குழப்பாமல் இருக்கும் லேன் அசிஸ்ட், வாகனம் கவிழாமல் இருக்க ரோல் ஓவர் மிட்டிகேஷன் போன்ற ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். விபத்தே ஆனாலும் உள்ளே பயணிகளுக்குப் பெரிய காயங்களை ஏற்படுத்தாதவை லக்ஸூரி கார்கள். இதில் வால்வோ டாப் லெவல். வெளியே போகும் பாதசாரிகளுக்கெல்லாம் இதில் பானெட்டில் காற்றுப் பை உண்டு என்றால்… சூப்பர்தானே!

Bentley Bentayga S
Bentley Bentayga S

3. காருக்குள்ளே நுழைந்ததுமே காஸ்ட்லி மெட்டீரியல் வாசம் நம் நாசியைத் துளைத்தால் அது சொகுசு கார். இன்டீரியரில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல் உயர்தரமாக இருக்க வேண்டும். ஸ்டீரியோ சரவுண்ட் சிஸ்டம், பிராண்டடாக இருக்க வேண்டும்.

4. மிக முக்கியமாக இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் பட்டையைக் கிளப்ப வேண்டும். இதன் பவர் சுமாராக 190 bhp–யைத் தொட்டிருக்க வேண்டும். 0–100 கிமீ–யை சுமார் 7 முதல் 8 விநாடிகளுக்குள் கடந்தால் அவை சொகுசு கார்கள். இதன் டாப் ஸ்பீடு 200 கிமீ–க்கு மேல் இருக்க வேண்டும்.

Bentley Continental GT Mulliner
Bentley Continental GT Mulliner

5. இறுதியாக, தேவைக்கு அதிகமான ஃபீச்சர்ஸ் இருந்தால் அது சொகுசு கார். உதாரணமாக பெரிய பனோரமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் போன் வசதிகள், டிரைவருக்குக் கண் கூசாத விண்ட்ஸ்க்ரீன், கேப்டன் சீட்கள் போன்ற ஏகப்பட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

6. மிக முக்கியமாக, விலை அதிகமாக இருக்க வேண்டும். கூடவே, பிராண்ட் வேல்யூவும் அந்தஸ்த்தும் மதிப்பும் இருக்க வேண்டும்!

ஆடி A6
ஆடி A6

ஓகே! இப்போ மதன் வைத்திருக்கும் ஆடி A6 சொகுசு கார் கேட்டகிரியில் வருமா எனப் பார்க்கலாம்!

1. A6–ன் வீல்பேஸ் சுமார் 2,900 மிமீ–க்கு மேல். பின் பக்க சீட்டில் சும்மா படுத்துக் கொண்டே போகலாம். அவ்வளவு இடவசதி உண்டு. டிரைவருக்கு பவர்டு சீட் இருக்கிறது. ஆனால், வென்டிலேட்டட் மசாஜ் சீட் இல்லை!

2. உள்ளே 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆரம்பித்து, ஆப்பிள் ஆண்ட்ராய்ட் கனெக்டிவிட்டி, டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், காரை ஆஃப் செய்தபிறகும் ஈஸியாக அட்ஜஸ்ட் செய்யக் கூடிய ரீச்/ரேக் ஸ்டீயரிங், போன் சார்ஜ் செய்ய போர்ட்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டு. கையை ஹாயாக விட்டுவிட்டு காரை பார்க் செய்ய உதவும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங் வசதி இருந்தாலும், 360 டிகிரி கேமராவில் கோட்டை விட்டுவிட்டது ஆடி A6.

டாப் ஸ்பீடு 255 கிமீ
டாப் ஸ்பீடு 255 கிமீ
செம காஸ்ட்லியான மெட்டீரியல்ஸ்
செம காஸ்ட்லியான மெட்டீரியல்ஸ்

3. ஆடி A6–க்குள் நுழைந்தால், ஏதோ விமானத்தின் காக்பிட்டுக்குள் நுழைந்ததுபோல் ஒரு பிரமிப்பு ஏற்படுவது உண்மைதான். செம காஸ்ட்லியான பாகங்கள்!

4. இன்ஜின் பெர்ஃபாமன்ஸில் பட்டையைக் கிளப்பும் ஆடி A6. 245bhp பவர் கொண்ட இதன் டாப் ஸ்பீடு 255 கிமீ. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இது 0–100 கிமீட்டர் வேகத்தை வெறும் 6.9 விநாடிகளில் கடக்கும்.

5. சொகுசான பயண அனுபவத்தில் எப்போதும் டிஸ்டிங்ஷன்தான் வாங்கும் ஆடி கார்கள். இதில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் செட்–அப் இருப்பதால் காருக்குள் அலுங்கல், குலுங்கல்கள் தெரியாது. 200 கிமீ வேகத்தில் போனால்கூட, சிந்தாமல் சிதறாமல் டீ குடிக்கலாம் எனும் அளவுக்கு டைனமிக்ஸும் ரிஃபைன்மென்ட்டும் ஆடி A6–ன் ஸ்பெஷல். ஆனால், அதற்கு ரோடு தரமாக இருக்கவேண்டும் மக்களே!

8 இன்ச் டச் ஸ்க்ரீன்
8 இன்ச் டச் ஸ்க்ரீன்
Audi A6 - விலை சுமார் 60 லட்சத்தில் இருந்து 65 லட்சம் வரை
Audi A6 - விலை சுமார் 60 லட்சத்தில் இருந்து 65 லட்சம் வரை

6. A6–ன் ஆன்ரோடு விலை சுமார் 60 லட்சத்தில் இருந்து 65 லட்சம் வரை. A3 (இனிதான் வரும்), A4-க்குப் பிறகு ஆடி நிறுவனத்தின் மூன்றாவது கேட்டகிரியில் வரும் சொகுசு கார் இது.

இப்போது பப்ஜி மதனின் ஆடி A6 சொகுசு காரா இல்லையா என நீங்கள்தான் சொல்லவேண்டும்... அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism