Published:Updated:

`உற்பத்தி.. டீலர்.. சர்வீஸ்..!’ டூ-வீலர் நிறுவனங்களின் செயல்பாடு, இப்போது எந்த அளவில் இருக்கிறது?

டூ-வீலர் நிறுவனங்கள்
டூ-வீலர் நிறுவனங்கள் ( Autocar India )

ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததே. எனவே, நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் உணர்வு மேலோங்கியிருக்கிறது.

கொரோனா.... இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் ஒருபுறம் உயர்ந்துகொண்டே இருந்தாலும், மறுபுறத்தில் ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பகுதிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்வது வரவேற்கத்தக்க விஷயம்தான். இதனால், ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததே. எனவே, நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் உணர்வு மேலோங்கியிருக்கிறது. இதில் ஒரு பகுதியாக, ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த ஆலைகள் - டீலர்கள் - சர்வீஸ் சென்டர்கள் - உதிரிபாக விற்பனை நிலையங்கள் ஆகியவை கடந்த வாரம் முதலாகவே செயல்படத் தொடங்கிவிட்டன. டூ-வீலர் நிறுவனங்களின் செயல்பாடு, எந்த அளவில் இப்போது இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

பஜாஜ் மற்றும் கேடிஎம்

Bajaj Dealer
Bajaj Dealer
Autocar India

கேடிஎம்மின் டீலர்கள் செயல்படத் தொடங்கிவிட்டாலும், கொரோனா தொற்று இருக்கும் அளவைப் பொறுத்து (ஆரஞ்ச் மற்றும் சிவப்பு), சில இடங்களில் விற்பனை அல்லது சர்வீஸ் என இரண்டில் ஒன்று மட்டுமே நடைபெறுகிறது. பச்சைப் பகுதிகளில் எதிர்பார்த்தபடியே விற்பனை மற்றும் சர்வீஸ் என இரண்டுமே செயல்படுகின்றன. பஜாஜைப் பொறுத்தவரை, இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே, சக்கன் - அவுரங்காபாத் - பன்ட்நகர் ஆகிய இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை ஆரம்பித்துவிட்டது. மேலும், அரசு அறிவித்திருந்த விதிகளுக்கு உட்பட்டு, டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன.

கிளாஸிக் கார் பிரியர்களைக் கவர்ந்த டொயோட்டா 
கொரோனா! ஏன் நின்றது?

ஹீரோ மோட்டோகார்ப்

Hero Dealers
Hero Dealers
Autocar India

நாடெங்கும் இருக்கும் தனது 1,500 விற்பனை நிலையங்களின் கதவுகளைத் திறந்திருக்கிறது ஹீரோ. இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 30% எண்ணிக்கை, இதிலிருந்துதான் வரும். சூட்டோடு சூடாக, 10,000-க்கும் அதிகமான டூ-வீலர்களை ஹீரோ விற்பனை செய்துவிட்டது! மேலும், இந்த நிதியாண்டில் முதன்முறையாக, கடந்த வாரத்தில் வாகன உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு, அவை டீலர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன; அதற்கேற்ப ஹீரோவின் கூர்கான் - ஹரித்வார் - Dharuhera தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. Mask, Gloves, Sanitizer, Disinfectant ஆகியவை டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஹோண்டா டூ-வீலர்ஸ்

Honda Dealers
Honda Dealers
Autocar India

கடந்த வாரம் முதலாகவே, ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பகுதிகளில் இருக்கும் டீலர்களைத் திறந்துவிட்டது ஹோண்டா. ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள், வாடிக்கையாளர் தேவைக்கேற்ப இயங்கும் எனத் தெரிகிறது. Sanitization, சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்படும் என்பது ப்ளஸ். மற்றபடி ஊரடங்கு அமலில் இருந்த நாள்களில், டீலர்களிடம் இருந்த BS-6 வாகனங்களுக்கான Interest Cost-யை வழங்க முடிவெடுத்திருக்கிறது ஹோண்டா. இது அவர்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் எனலாம்.

ஜாவா

Jawa Dealer
Jawa Dealer
Autocar India

மஹிந்திராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், தனது டீலர்களைத் திறந்துவிட்டது. சமூக இடைவெளியை ஊக்குவிக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் அப்பாயின்மென்ட் பெற்ற பிறகே அலுவலகத்துக்கு வர வேண்டும். டெஸ்ட் ரைடு மற்றும் டிஸ்பிளேவில் இருக்கும் பைக்குகள், போதிய இடைவெளியில் Sanitize செய்யப்பட வேண்டும். சர்வீஸ் சென்டருக்கும் இது பொருந்தும். டிஜிட்டலாக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீட்டுக்கே டெஸ்ட் டிரைவ் - டெலிவரி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி இனிமேல்தான் தொடங்கப்படலாம்.

ராயல் என்ஃபீல்டு

RE Oragadam Factory
RE Oragadam Factory
Autocar India

சென்னையில் அமலில் இருந்த ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், கடந்த வாரத்திலேயே ஒரகடத்தில் இருக்கும் தனது தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது ராயல் என்ஃபீல்டு. தற்போதைய சூழலில் குறைவான ஊழியர்களுடன் ஒற்றை ஷிஃப்ட் முறையில் இயங்குகிறது. பின்னர் வல்லம் வடகல் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஆலைகளும் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் டீலர்களில் முதற்கட்டமாக 120 பேர் திறக்கப்பட்டாலும், இந்த எண்ணிக்கை விரைவில் 300-யைத் தாண்டக்கூடும்.

டிவிஎஸ்

TVS Plant
TVS Plant
Autocar India

ஒசூர், மைசூர், Nalagarh ஆகிய இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது டிவிஎஸ். இவை முழு திறனில் செயல்படாவிட்டாலும் (ஷிஃப்ட் சிஸ்டம்), பரிந்துரைக்கப்பட்ட விதிகள் அனைத்துமே இங்கு பின்பற்றப்படுகின்றன. சில ஊழியர்கள், வீடுகளில் இருந்தும் பணியாற்றுகிறார்கள். நடப்பு நிதியாண்டில் 3.65 லட்சம் டூ-வீலர்கள் விற்பனையாகி, 1-1.5 லட்ச ரூபாய் பைக் செக்மென்ட்டில் அதிகமாக விற்பனையான மாடலாக அப்பாச்சி சீரிஸ் இருக்கிறது (160 2V, 160 4V, 180 2V, 200 4V). RR310 அடுத்த பிரிவுதான்.

அடுத்த கட்டுரைக்கு