Election bannerElection banner
Published:Updated:

`ஆல்ட்டோ ஏன், லம்போகினிபோல இல்லை' கார் டிசைன்களின் அடிப்படை விஷயங்கள்!

கார் டிசைன்
கார் டிசைன்

டிசைன் படிப்பவர்களின் முதல் பாடம், டிசைன் யாருக்கானது என்பதை கற்றுக்கொள்வதே.

1980-களின் தொடக்கம் வரை வந்த கார்கள் ஹூட், கேபின், டிரன்க் என மூன்று கட்டங்களை ஒட்டவைத்ததுபோலத்தான் இருந்தன. ஆனால், 80-களின் பிற்பகுதியில், எல்லா கார்களும் லட்டு, ஜாங்கிரியைப் போல மொழுமொழுவென மாறிவிட்டன. இந்த மாற்றம், முதன்முதலில் ஐரோப்பியாவில் நிகழ்ந்ததாக A century of car design என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. 1963-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ஷே 911, அந்த நூற்றாண்டில் யாரும் பார்க்காத முதல் curvy கார்.

1963 போர்ஷ் 911
1963 போர்ஷ் 911
ஃபோர்டு சியெரா
ஃபோர்டு சியெரா

கார்களின் இந்த டிசைன் மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், வேகம். இரண்டாவது காரணம் மைலேஜ். பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ், ஜாகுவார், ஆஸ்டான் மார்ட்டின் போன்ற ஐரோப்பிய சொகுசு கார்களுக்கு வேகம் தேவைப்பட்டது. இதனால், காரை ஏரோடயமிக்காக வடிவமைக்க, விண்டு டனலில் டெஸ்ட் செய்து, அதற்கேற்ப காரின் டிசைனை மாற்றியமைத்தார்கள். 1970-க்குப் பிறகு, விலை உயர்ந்த கார்கள் எல்லாம் மொழுமொழுவென வர... அந்த டிசைன் அப்படியே சின்ன கார்களுக்கும் டிரெண்டாகிவிட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இந்த டிசைன் தோல்வியடைந்தது. கிரைஸ்லர் ஏர்ஃபிளோ முதல், ஃபோர்டு சியெரா வரை வந்த வளைவு நெளிவான கார்கள் சரியாக விற்பனையாகவில்லை. ஈரான்-ஈராக் ஆயில் யுத்தத்தால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பது குறைந்தபோது, அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் ஆடம்பர கார்களின் விற்பனை குறைந்து மைலேஜ் அதிகம் கொடுக்கும் கார்களுக்கு டிமாண்ட் கூடியது. மைலேஜ் அதிகரிக்க, அமெரிக்க கார் நிறுவனங்கள் விண்டு டனலிலேயே உட்கார்ந்து தங்கள் காரின் டிசைனைச் செதுக்கினார்கள். அமெரிக்காவிலும் பாக்ஸ் டிசைன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, கார்கள் மொழுமொழுவென மாறின. விண்டு டனல் டெஸ்ட் மூலம் காரின் மொத்த உருவத்தை வடிவமைத்து, ஹிட் அடித்த முதல் அமெரிக்க கார், ஃபோர்டு டாரெஸ் (Tarus).

ஃபோர்டு டாரெஸ்
ஃபோர்டு டாரெஸ்

டிசைன் படிப்பவர்களின் முதல் பாடம், ஒரு டிசைன் யாருக்கானது என்பதை கற்றுக்கொள்வதே. ஆல்ட்டோ ஏன், லம்போகினி போல இல்லை' என யோசித்திருப்பீர்கள். அதற்கான விடை, மனிதனின் எமோஷன். இங்கே, ஒரு கார் டிசைனின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விஷயம் காலகட்டம், கலாசாரம் மற்றும் தேவை. இந்தக் கட்டங்களை டிக் அடிக்காத டிசைன் எல்லாம், ஜெய்சங்கர் நடித்த Cowboy படங்கள் போல நமக்கும் அந்நியமாகவே இருக்கும்.

டிசைன் படிக்கப்போகிறேன் என முடிவெடுத்துவிட்டால், அதில் என்ன படிக்கலாம் எனத் தேர்ந்தெடுக்கவேண்டியது மிகவும் முக்கியம். இன்ஜினீயரிங் டிசைன் படிக்க தொழில்நுட்பம் தெரிய வேண்டும். க்ரியேட்டிவ் டிசைன் என்பது கலை சார்ந்தது. கலை ரீதியான, க்ரியேட்டிவ் பார்வை தேவை. க்ரியேட்டிவ் டிசைனை டிசைன் ஸ்கூலில் படிக்கலாம். இந்த க்ரியேட்டிவ் டிசைனுக்குள்ளேயே பல துறைகள் உண்டு.

இந்தியாவில், ஓர் ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 டிசைனர்களின் தேவை உள்ளது. டிசைன் என்றால் வெளித்தோற்றம் மட்டுமே டிசைன் இல்லை. ஆட்டோமொபைலைப் பொருத்தவரை ஒரு வாகனத்தை வடிவமைக்க கான்செப்ட் ஸ்கெட்சிலிருந்து ஆரம்பித்து சேஸி, பவர்ட்ரெயின், கேபின், ஸ்டைலிங், கலர், மெட்டீரியல் என்று பல கட்ட வடிவமைப்புகள் தேவை. க்ளே மாடலிங், ப்ரோட்டோடைப், சர்ஃபேஸ், டூல், டை எனப் பல துறைகளைத் தாண்டித்தான் கணினியில் வரையும் ஸ்கெட்ச் வடிவம் எடுக்கும்.

ஒரு கார் டிசைனின் முதல் புள்ளி, டிசைன்/ஸ்டைலிங் ஸ்டூடியோவில்தான் வைக்கப்படுகிறது. க்ரியேட்டிவ், ஃபிசிக்கல் மோல்டிங், டிஜிட்டல் இளுஸ்ட்ரேஷன், கலர் மெட்டீரியல் & டெக்ஷர் (CMT), விர்ச்சுவல் ரியாலிட்டி என ஸ்டைலிங் ஸ்டூடியோவில் 5 துறைகள் இருக்கின்றன. ஸ்டூடியோவில் உருவாகும் டிசைன்கள், க்ளே மாடலிங் துறைக்குச் செல்கின்றன. ஒரு டிசைனை, களிமண் கொண்டு தத்ரூபமான வாகனமாக மாற்றுவதுதான் க்ளே மாடலிங் துறையினரின் வேலை. இது முடிந்த பிறகுதான், டிசைன் என்பது இன்ஜினீயரிங் துறைக்குச் செல்கிறது.

download
ஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு - டிசைன் துறையில் வேலைவாய்ப்பு எப்படி?

டிசைன் என்றால், டார்கெட்டுகளை நோக்கி ஓடும் வேலையா? டிசைன் ஸ்டூடியோவில் வேலை செய்யும் அனுபவம் எப்படி இருக்கும்? இங்கே என்னென்ன மென்பொருள்கள் பயன்படுத்துவார்கள்? டிசைனர்கள் காரை வரையும்போது, என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள்? சர்ஃபேஸ் டிசைன் என்றால் என்ன? Class A சர்ஃபேஸ் என்றால் என்ன? இப்படிப் பல கேள்விகள் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் (Thiyagarajar college of engineering) பதில் கிடைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு