Published:Updated:

ஆன்லைனில் வாகன விற்பனை... ஆட்டோமொபைல் துறைக்கு உதவிகரமாக இருக்குமா?

Click To Buy
Click To Buy ( Hyundai India )

கொரோனாவுக்கு முன்பாகவே டீலர்களிடம் வருவோர் சரிவைச் சந்தித்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நிறுத்தப்பட்ட பிறகும் ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பதற்கான சாத்தியமும் மிகக் குறைவாகவே உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் சரியாவதற்கு 6 மாத காலமாவது தேவைப்படலாம்.

கொரோனா இந்திய மக்களை மட்டுமல்லாது, அதன் பொருளாதாரத்தையும் சேர்த்து முடக்கியிருக்கிறது. ஒருபுறத்தில் புதிய வாகனங்களை உற்பத்திசெய்யும் ஆலைகளும், அதை விற்பனைசெய்யும் டீலர் ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. மறுபுறம் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வீடுகளில் மக்கள் முடங்கியிருக்கின்றனர். இதனால் BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் 10 நாள் அவகாசம் எவ்விதத்திலும் உதவாது என்ற சூழலே இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பாகவே டீலர்களிடம் வருவோர் சரிவைச் சந்தித்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நிறுத்தப்பட்ட பிறகும் ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் சரியாவதற்கு ஆறுமாத காலமாவது தேவைப்படலாம். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமது வலைதளங்களிலேயே, புதிய வாகனங்களை விற்பனை செய்வதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஏற்கெனவே புதிய வாகனங்களை புக் செய்யும் வசதி இருந்தது நினைவிருக்கலாம். இது ஆட்டோமொபைல் விற்பனை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்குமா?

Icon Drones
Icon Drones
Geely

டூ-வீலர் நிறுவனங்களில், ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகியவை ஆன்லைனில் டூ-வீலரை புக் செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2019 முதலாக, ஆன்லைனில் வாகனத்தை புக் செய்தோருக்கு, அதை அவர்களின் வீட்டிலேயே டெலிவரி கொடுக்கும் ஆப்ஷனைச் சேர்த்துவிட்டது. இந்தியாவின் 25 நகரங்களில் வழங்கப்படும் இந்தச் சேவையைப் பயன்படுத்த, 349 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். கார் நிறுவனங்களில், தமது தளத்திலேயே காரை புக் செய்வதற்கு என டாடா மற்றும் ஹூண்டாய் ஆகியோர், சிறிதாக ஒரு மைக்ரோ சைட்டை வைத்திருக்கிறார்கள்.

ஹீரோ போலவே, டாடாவும் ஆன்லைனில் புக் செய்த காரை வீட்டுக்கே டெலிவரி செய்யும் ஆப்ஷனைத் தருகிறது. லக்ஸுரி கார் நிறுவனங்களில் மெர்சிடீஸ் பென்ஸ், ஆன்லைனில் கார்களை வர்த்தகம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறது. எனவே 2025-க்குள்ளாக, தான் விற்பனை செய்யும் கார்களில் 25% ஆன்லைனில் இருந்து வரும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச அளவில் பார்த்தால், வால்வோவின் உரிமையாளரான Geely, கொரோனா காரணமாக ஆன்லைன் கார் வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டது. ட்ரோனில் காரின் சாவி வந்தால், கார் வீட்டுக்கு டெலிவரி ஆகும்!

My Renault App
My Renault App
Renault India

ஆன்லைனில் வாகன விற்பனையா... எப்படி?

ஒருவர் எந்த நிறுவனத்தின் வாகனத்தை வாங்க உள்ளாரோ, அந்த நிறுவனத்தின் வலைதளத்துக்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் பிடித்தமான வாகனத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு, உங்களின் இருப்பிடம் மற்றும் உங்கள் விருப்பத்துக்கேற்ற டீலர் ஆகிய தகவல்களைப் பதிவிட்டு, வாகனத்தை புக் செய்துவிட வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் குறிப்பிட்ட டீலரிடமிருந்து ஒரு விற்பனைப் பிரதிநிதி உங்களை அழைத்துப் பேசுவார். விலை, ஆஃபர், கடன் வசதி, பழைய காருக்கான எக்ஸ்சேஞ்ச் ஆகிய விவரங்களைச் சொல்லுவார். இடையிடையே இ-மெயில் அல்லது வீடியோ கால் ஆகியவற்றிலேயே, எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே முடித்துவிடலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் செய்வதுபோல சுலபம்தான்! இதனால் ஒருவர், தான் வாங்கப்போகும் காரைத் தவிர, அதே விலையில் அந்த நிறுவனத்திடம் கிடைக்கக்கூடிய மற்ற மாடல்களையும் பார்ப்பதற்கான நேரம் கிடைக்கும்.

அப்போது டீலர்களின் கதி என்ன?

My Skoda App
My Skoda App
Skoda India

கடந்த 5 வருடங்களில்தான், பொருள்களை அதிகமாக நாம் ஆன்லைனில் வாங்கும் பழக்கத்துக்கு மாறியிருக்கிறோம். மற்றபடி முன்பெல்லாம் மொபைல், டிரெஸ், லேப்டாப், வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரானிக் உபகரணங்கள் என எல்லாவற்றையுமே ஷோரூம்களுக்குப் போய் வாங்குவதே வாடிக்கை. எனவே, பிடித்தமான ஒன்றை வாங்கப்போய், அதை ட்ரையல் பார்த்துவிட்டு வாங்குவது ஒரு ரகம். மற்றபடி தனக்குத் தகுந்த பட்ஜெட்டில் கிடைப்பதைத் தேடிப்பார்த்து வாங்குவது மற்றொரு ரகம். அதாவது, ஒருவருக்கு எது வேண்டுமானதாக இருந்தாலும், தேவை என்றால் மட்டுமே அதை வாங்க வேண்டும் என்ற நிலையே இருந்தது. ஆனால், தற்போது காலணிகள் (Shoe/Slipper), வாட்ச் & Band, கண்ணாடிகள் (Power/Sun), பேக்ஸ் (Suitcase/Backpack) போன்ற அணிகலன்களைத் தாண்டி, எல்லாவற்றையும் இப்போது கணக்கில்லாமல் வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டோம் என்பதே நிதர்சனம். இவை, குறுகிய காலப் பயன்பாட்டுச் சாதனங்கள் என்பதால், இவற்றை ஆன்லைனில் வாங்குவது ஒரு பிரச்னையில்லை.

ஆனால், கார்/டூவீலர் போன்ற நீண்ட காலப் பயன்பாடு கொண்டவற்றை, ரிவ்யூ தொடர்பான கட்டுரைகள், யூடியூப் விடியோக்கள் பார்த்தே முடிவுக்கு வர முடியாது. அதை டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்துவிட்டு முடிவெடுப்பதே நன்றாக இருக்கும். எனவே, வசதிக்கு ஏற்ப ஆன்லைனில் வாகனங்களை புக் செய்தாலும், வீட்டுக்கே நீங்கள் வாங்கப்போகும் வாகனத்தை வரவழைத்தாவது டெஸ்ட் டிரைவ் செய்துபாருங்கள். ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஆன்லைனில் வாகனங்களை வர்த்தகம் செய்யும்போது, முன்பைவிட மக்களிடமிருந்து அதிக விசாரிப்புகள் வரலாம்.

Online Configurator
Online Configurator
Mahindra

ஆனால், அதற்கு உகந்தபடியான தயாரிப்புகளைத் தகுந்த விலையிலும் தரத்திலும் தருவது, அந்தந்த நிறுவங்களிடம்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எப்படி லேப்டாப் - மொபைல், டிரெஸ் - அணிகலன் போன்ற தனிநபர் சார்ந்த தேவைகளைக் கடைகளில் இருந்து ஆன்லைனில் வாங்கத் தொடங்கினோமோ, அதேபோல வாகனங்களையும் ஆன்லைனிலேயே வாங்கும் காலம் வரலாம்.

RV400 ஆட்டோமொபைல்
RV400 ஆட்டோமொபைல்
Revolt Motors

ஆனால், அந்தப் பொருள்களுக்குக் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்கள் ஆகியவை போல இங்கே கிடைக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்.

அடுத்த கட்டுரைக்கு