Published:Updated:

`100 விதிகள்; வாரத்துக்கு 1,400 கார்கள்!' -ஊரடங்குக்குப்பின் மீண்டும் இயங்கத் தொடங்கிய ஃபோக்ஸ்வாகன்

VW தொழிற்சாலை
VW தொழிற்சாலை ( Autocar India )

வாகனங்களற்ற சாலைகள், உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகள் எனக் கடந்த ஒரு மாதமாகவே, சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறை எந்தவித செயல்பாடுமின்றி ஸ்தம்பித்து நின்றது என்பதே நிதர்சனம்.

கொரோனா தொற்றின் அபாயத்தால், உலகின் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதில் பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இதனால் ஆட்டோமொபைல் துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வாகனங்களற்ற சாலைகள், உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகள் எனக் கடந்த ஒரு மாதமாகவே, சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறை எந்தவித செயல்பாடுமின்றி ஸ்தம்பித்து நிற்கிறது என்பதே நிதர்சனம்.

Skoda Czech Republic
Skoda Czech Republic
Autocar India

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் (Wolfsburg) நகரில் அமைந்துள்ள ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலை, தற்போது மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. அந்த நாட்டில் வேகமாகப் பரவி வந்த கொரோனாவினால், கடந்த மார்ச் 19, 2020 அன்று அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது. தற்போது ஊழியர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 100 விதிகளுடன் மீண்டும் கார் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6.30 மணிக்கு பணிகள் தொடங்கியதுடன், VW Golf-தான் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பில் 5-வது இடம்; உயிரிழப்பில் 10-வது இடம் - உலக நாடுகளைப் பிரமிப்பில் ஆழ்த்திய ஜெர்மனி

இதன் 82 ஆண்டுக்கால வரலாற்றில், இத்தனை நாள்கள் (40) செயல்படாமல் இருந்தது இதுவே முதன்முறை. தற்போது இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டதால், ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் துறையில் பணிபுரியும் சுமார் 14 மில்லியன் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரம் ஆகியவற்றைச் சரிவிலிருந்து மீட்க, இது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 1945-ல் தொடங்கப்பட்டு, இன்றுவரை 45 மில்லியனுக்கும் அதிகமான கார்களைத் தயாரித்திருக்கிறது இந்தத் தொழிற்சாலை.

VW Online Sales
VW Online Sales
Autocar India

தற்போது மீண்டும் உற்பத்தி தொடங்கியது குறித்து தொழிலாளர் பிரதிநிதியான பெர்னர்ட் ஓஸ்டெர்லோ, `இதுமாதிரியான அசாதாரண சூழ்நிலையில், நாங்கள் கார் தயாரிப்பில் ஈடுபடுவது இதுவே முதல்முறை' என்றார். சென்ற வருடத்தில் நாள் ஒன்றுக்கு 3,500 கார்கள் வரை தயாரிக்கப்பட்ட நிலையில், இப்போது அங்கு பாதுகாப்பு நிபந்தனைகள் காரணமாக ஒரு வாரத்துக்கு 1,400 கார்கள் என்ற அளவில் தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 2,600-க்கும் அதிகமான உதிரிபாக உற்பத்தியாளர்கள் தங்களின் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டனர்.

ஆனால், இந்த எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 6,000 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. மேலும் ஒரு ஷிப்ட்டுக்கு 20,000 பணியாளர்கள் என்ற எண்ணிக்கை, இதனால் 8,000 ஆகக் குறைந்திருக்கிறது. அவர்கள் ஷிப்ட் முடிந்து செல்கையில், அடுத்த ஷிப்ட்டில் பணிபுரிபவர்களைச் சந்திக்காதவகையில் நேரம் மாற்றம் கண்டுள்ளது. தொழிற்சாலையிலுள்ள கேன்டீன் மூடப்பட்டு, அனைத்துப் பணியாளர்களும் தங்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VW Polo 1.0 TSI
VW Polo 1.0 TSI
Autocar India

மேலும் கதவுகள் அனைத்தையும் முழங்கையைக் கொண்டு திறத்தல், கார் தயாரிக்கும் இடம் முதல் முக்கிய சந்திப்புகள் நிகழும் இடம் வரை கண்டிப்பான தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கை குலுக்கத் தடை, கைகளை அடிக்கடி கழுவுதல் என அங்கு பல்வேறு நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே ஃபோக்ஸ்வாகனின் 70% டீலர்கள் செயல்படத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் ஆன்லைன் கார் விற்பனையைத் தொடங்கிவிட்டோம்” என்றார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் ஆட்டோமொபைல் துறையில் சரிவைச் சந்தித்தச் சூழலில், தற்போது சீனா அதிலிருந்து மிக விரைவாகவே மீண்டுள்ளது. ஆனால் Duisburg-Essen பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஐரோப்பாவில் ஆட்டோமொபைல் துறை 2019-ல் இருந்த அளவை எட்டவே இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு