Published:Updated:

`X1 ரேஸிங் லீக்’- மும்பை, பெங்களூரு அணிகள் அசத்தல்; சிங்கிள் காருடன் போட்டியிட்ட சென்னை

X1 ரேஸ்
News
X1 ரேஸ்

X1 கார் பந்தயத்தின் இரண்டாம் சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது. அதன் அப்டேட் பார்ப்போம்.

X1 ரேஸிங் லீக் எனும் சிங்கிள் சீட்டர் கார் பந்தயம் நேற்று சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக லீக் ஃபார்மேட்டில் நடத்தப்படும் கார் பந்தயம் இது. தற்போது ஆரம்பகட்டமாக டெல்லி மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

X1 Race League
X1 Race League

சென்ற வாரம் டெல்லியில் முதல் ரேஸ் முடிந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த இரண்டாம் பந்தயத்தில் மொத்தம் 6 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வோர் அணியிலும் ஒரு சர்வதேச ஆண் மற்றும் பெண் ரேஸர், உள்நாட்டு போட்டிகளில் பங்குபெறும் இந்திய ரேஸர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் போட்டியிடும் இரண்டு டொமஸ்டிக் ரேஸர் என ஓர் அணிக்கு 5 வீரர்கள், இரண்டு கார்கள் இடம்பெற்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்தியாவின் முதல் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவில் முதல் அர்ஜுனா விருது பெற்ற கௌரவ் கில், ஃபார்முலா 2 ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட அர்ஜுன் மைனி ஆகியோர் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

மெட்ராஸ் ரேஸ் ட்ராக்
மெட்ராஸ் ரேஸ் ட்ராக்

நேற்று சென்னையில் நடைபெற்ற பந்தயத்தில், முதல் சுற்றில் பெங்களூரு அணி நான்காவது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கியிருந்தாலும் சில திறமையான உத்திகளால் முதலிடம் பிடித்தது. ஆனால் அடுத்து நடந்த இரண்டு சுற்றுகளிலும் மும்பை அணி முதலிடத்துக்கு வந்துவிட்டது. மும்பையைச் சேர்ந்த குஷ் மைனி மற்றும் மிக்கல் ஜென்சன் முதலிடம் பிடித்தார்கள். பெங்களூரைச் சேர்ந்த அர்ஜுன் மைனி மற்றும் ஆலிவர் வெப் இரண்டாம் இடம் பிடித்தார்கள். டெல்லியில் நடைபெற்ற முதல் பந்தயத்திலும் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளே முதல் இடத்தைப் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Madras race track
Madras race track

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் இரண்டு கார்களில் ஒன்று கோளாறு காரணமாகப் பந்தயத்திலிருந்து வெளியேறியதால் ஒரு காரில் மட்டும் சென்னை அணி போட்டியிட்டது.