இந்தியாவிலிருந்து முதன்முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் மொனாக்கோ எனர்ஜி படகுப் போட்டியில் பங்கேற்கும் கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள்.
உலகின் பல்வேறு நாடுகள் பங்குபெறும் சர்வதேச அளவிலான 'மொனாக்கோ எனர்ஜி' படகுப் போட்டியின் ஒன்பதாவது உலக சாம்பியன்ஷிப் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து முதன்முறையாக கோவையைச் சேர்ந்த குமரகுரு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்காக இவர்கள் தயாரித்த இந்தியாவின் முதல் எனர்ஜி படகு (1st Indian Energy Boat) இந்த 'யாளி.'
யாளி... சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுமாடும் ஏற்படாத வகையில் முழுக்க முழுக்க சோலார் மற்றும் எலெக்ட்ரிக் ஆற்றல் மூலம் இயங்கக்கூடிய படகு. இதில் சோலார் முதன்மை நிலை ஆற்றலாகவும் எலெக்ட்ரிக் இரண்டாம் நிலை ஆற்றலாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது. மூன்று மாதத்தில் தயார் செய்யப்பட்ட இப்படகு சோலார் பேனல், எலக்ட்ரிக் பேட்டரி, ஒயிட் ஹல் மற்றும் காக்பிட் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'யாளி' உருவான விதம் குறித்தும் இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்தக் காணொலியில் பார்ப்போம்.