Published:Updated:

Yamaha Scooter: வாடிக்கையாளர்களே சோதனை செய்யும் யமஹா ஸ்கூட்டரின் மைலேஜ் சவால்

யமஹா ஸ்கூட்டர் மைலேஜ் சேலஞ்ச்

உற்சாகத்துடன் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள்!

Yamaha Scooter: வாடிக்கையாளர்களே சோதனை செய்யும் யமஹா ஸ்கூட்டரின் மைலேஜ் சவால்

உற்சாகத்துடன் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள்!

Published:Updated:
யமஹா ஸ்கூட்டர் மைலேஜ் சேலஞ்ச்

யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 125 சிசி ஹைபிரிட் ஸ்கூட்டர் மாடல்களின் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ளும் மைலேஜ் சவால் போட்டி மதுரையில் இன்று நடந்தது.

மைலேஜ் சேலஞ்ச்
மைலேஜ் சேலஞ்ச்

குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் கிடைப்பதை உறுதி செய்ய, வாடிக்கையாளர்கள் மூலமே சோதனை செய்து பார்க்கும் நிகழ்வுகளை யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அடிப்படையில் இன்று காலை மதுரையில் நடந்த சவால் சவாரியில் கலந்து கொள்ள 100 வாடிக்கையாளர்கள் யமஹாவின் 125 சிசி ஹைபிரிட் ஸ்கூட்டரின் அனைத்து மாடல்களுடன் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரையிலுள்ள யமஹா ஸ்கூட்டர் டீலர்கள் செய்திருந்தனர்.

பரிசு பெற்றவர்கள்
பரிசு பெற்றவர்கள்

போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நகரச் சாலை, தரமான நான்கு வழிச்சாலை வழியாக 30 கிமீ தூரம் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டல் குறிப்புகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் கோர்ட் யார்ட் ஹோட்டலிலிருந்து கிளம்பிய ஸ்கூட்டர்கள், ஒத்தக்கடை தாண்டி சிட்டம்பட்டி டோல்கேட் வரை சென்று திரும்பி வந்தன.

கிளம்புவதற்கு முன் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கணக்கிடப்பட்டது. யமஹா நிறுவன நிர்வாகிகள் கொடியசைக்க, ஸ்கூட்டர்கள் கிளம்பின. அரை மணி நேரம் கழித்துத் திரும்ப வந்தவர்களின் ஒவ்வொருவரின் எரிபொருள் அளவும், கிமீ அளவும் கணக்கீடு செய்யப்பட்டு, குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் சென்ற 5 சிறந்த வாடிக்கையாளருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

யமஹா 125 சிசி ஹைபிரிட் ஸ்கூட்டர்கள்
யமஹா 125 சிசி ஹைபிரிட் ஸ்கூட்டர்கள்

"மைலேஜ் அதிகம் தருவதாக நாங்களே விளம்பரம் செய்வதை விட, அதை வாடிக்கையாளரே பரிசோதனை செய்து திருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்!" என்றனர் யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தினர்.