Published:Updated:

கார் ஆர்வலரா... நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

ஆட்டோமொபைல் ( Google )

நீங்கள் ரைடர்/ரேஸர்/ஆட்டோமொபைல் ஆர்வலர்/டிராவலர் என எதுவாகவும் இருக்கும்பட்சத்தில், இந்தப் படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால், தற்போது வாகனம் ஓட்ட முடியாத நிலையே இருப்பதால், இவற்றை மீண்டும் பார்த்து அந்த உணர்வு எழாதவாறு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

கார் ஆர்வலரா... நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

நீங்கள் ரைடர்/ரேஸர்/ஆட்டோமொபைல் ஆர்வலர்/டிராவலர் என எதுவாகவும் இருக்கும்பட்சத்தில், இந்தப் படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால், தற்போது வாகனம் ஓட்ட முடியாத நிலையே இருப்பதால், இவற்றை மீண்டும் பார்த்து அந்த உணர்வு எழாதவாறு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

Published:Updated:
ஆட்டோமொபைல் ( Google )

இந்த வெயில் நேரத்தில் வீட்டுக்குள் இருப்பது கொஞ்சம் கடினமான சூழல்தான் என்றாலும், இந்த நோயின் (கொரோனா என்ற சொல்லைக் கேட்டாலே காய்ச்சல் வருவதுபோல இருக்கிறது) வீரியத்தைக் கட்டுப்படுத்துவதில், மக்கள் இப்படி Social Distancing ரீதியில் தனித்து இருப்பதே நல்லது. Work From Home பாணியில் இருப்பவர்கள், இடையிடையே புத்துணர்ச்சி பெறுவதற்குச் சில வழிகள் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் ரைடர்/ரேஸர்/ஆட்டோமொபைல் ஆர்வலர்/டிராவலர் என எதுவாகவும் இருக்கும் பட்சத்தில், இந்தப் படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால், தற்போது வாகனம் ஓட்ட முடியாத நிலை இருப்பதால், இவற்றை மீண்டும் பார்த்து அந்த உணர்வு எழாதவாறு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். மேலும், இவை மனதுக்குத் தன்னம்பிக்கையைத் தரும் என்பதே நிதர்சனம்.

ஃபோர்டு VS ஃபெராரி (2019) - ஐஎம்டிபி ரேட்டிங்: 8.1

Ford Vs Ferrari
Ford Vs Ferrari
imdb

கார்களை அடிப்படையாகக் கொண்ட படம் ஒன்று, சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு மிக நெருக்கத்தில் வந்தது இது மட்டும்தான்! ஆனால், அதோடு நில்லாமல், ஃபிலிம் எடிட்டிங் மற்றும் சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அமெரிக்க ரேஸராக இருந்து கார் டிசைனராக மாறிய கரோல் ஷெல்பி, பிரிட்டன் ஸ்போர்ட்ஸ் கார்களின் பொறியியல் வல்லுநர் மற்றும் ரேஸரான கென் மைல்ஸ் ஆகியோர் இணைந்து, 1966-ம் ஆண்டின் 24 மணிநேர 'லே மான்ஸ்' கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் அமெரிக்க காரை (ஃபோர்டு GT) எப்படித் தயாரித்தார்கள் என்பதை, இந்தப் படம் மிகவும் சுவாரஸ்யமாக விளக்குகிறது. முறையே 'மேட் டாமன்' மற்றும் 'கிறிஸ்டியன் பேல்' ஆகியோரின் மிரட்டலான நடிப்புக்காகவும் படத்தில் இருக்கும் கார்கள் 7,000 ஆர்.பி.எம்முக்கு மேலே செல்வதை உணரவும், இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஃபெராரியை எந்தச் சமயத்தில் ஃபியட் வாங்கியது போன்ற விபரங்களையும் படம் தொட்டுச் செல்வது ப்ளஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஷ் (2013) - ஐஎம்டிபி ரேட்டிங்: 8.1

Rush
Rush
imdb

ஆஸ்கர் விருதைப் பெற்ற இயக்குநரான ரான் ஹாவர்ட்டின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் பயோ கிராஃபிக்கல் வகைப்படம், நிக்கி லவுடா மற்றும் ஜேம்ஸ் ஹண்ட் எனும் இரு பெரும் F1 ரேஸ் ஆளுமைகளுக்கிடையே நிலவிய போட்டி மனப்பான்மையை, யதார்த்தத்துக்கு மிக அருகில் இருந்து பதிவு செய்திருக்கிறது. பழைய கார்களின் ஸ்போர்ட்டி எக்ஸாஸ்ட் சத்தம், ஹான்ஸ் ஸிம்மரின் தரமான பின்னணி இசை, உணர்வுபூர்வமான திரைக்கதை எல்லாம் ஒன்றுசேர்ந்து, படம் பார்க்கும் நம்மையும் ரஷ்-படுத்துகின்றன. அவென்ஜர்ஸ் படங்களில் தாராக இருந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஜேம்ஸ் ஹண்ட் ஆகவும், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தில் நாஸி அதிகாரியாக நடித்த டேனியல் ப்ரூஹ்ல் நிக்கி லவுடாகவும் கிட்டத்தட்ட வாழ்ந்திருக்கிறார்கள். அதவும் நிக்கி லவுடா போலவே தனது தோற்றத்தையும் குரலையும் டேனியல் ப்ரூஹ்ல் மாற்றிக் கொண்டது அர்ப்பணிப்பின் உச்சம்!

கோன் இன் 60 செகண்ட்ஸ் (2000) - ஐஎம்டிபி ரேட்டிங்: 6.5

Gone in 60 Seconds
Gone in 60 Seconds
imdb

ஆக்‌ஷன் ஹெய்ஸ்ட் பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நிக்கோலஸ் கேஜ் - ஏஞ்சலினா ஜோலி நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். தனது சகாக்களுடன் சேர்ந்து, காலம் சென்ற ஹம்வி தொடங்கி 1967 ஷெல்பி GT 500 உட்பட 50 கார்களை எப்படித் திருடுகிறார்கள் என்பதை விலாவரியாகக் கூறுகிறது படம். இதைப் பார்த்துவிட்டு அனேகமாகக் கார் திருடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதால், 'சிறார்கள் தமது பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்' என்ற விதியுடனேயே இந்தப் படம் வெளியானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, ஏறக்குறைய கார் ஆர்வலர்கள் அனைவரின் மனதையும் நொறுக்கிவிடும்.

புல்லிட் (1968) - ஐஎம்டிபி ரேட்டிங்: 7.4

Bullitt
Bullitt
imdb

காலத்தால் அழிக்க முடியாத அமெரிக்கப் படங்களில் ஒன்றாக இருக்கும் இதில், 'கிங் ஆஃப் கூல்' என அழைக்கப்படும் ஸ்டீவ் மெக்குவின் மற்றும் பச்சை நிற ஃபோர்டு மஸ்டாங் GT 390 அதிரடியான கூட்டணியை அமைத்திருப்பார்கள். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வெளிவந்த கார் சேஸிங் காட்சி மட்டுமே 10 நிமிடம் 53 விநாடிகள் வரை பரபரப்பாக ஓடுகிறது! ஹாலிவுட் பட வரலாற்றில் இன்றளவும் சிறப்பான கார் சேஸிங் காட்சியாக இருக்கும் இது தரும் த்ரில் அனுபவத்துக்காக மட்டுமே, இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியர்ஸ்: டோக்யோ ட்ரிஃப்ட் (2006) - ஐஎம்டிபி ரேட்டிங்: 6.0

F&F: Tokyo Drift
F&F: Tokyo Drift
imdb

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் சீரிஸிலேயே, கிட்டத்தட்ட கார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் இதுதான்! ஏனெனில், இதர படங்களில் துப்பாக்கி, ட்ரோன், விமானம், நீர்மூழ்கிக் கப்பல், பிரங்கி ஆகியவற்றை கார்களுக்கு மத்தியில் பார்க்க முடியும். ஜப்பானில் பரவியிருந்த ட்ரிஃப்ட்டிங் கலை, JDM நாட்டுத் தயாரிப்புகள், ஜப்பானின் இருட்டுப் பக்கமான யகுஸா எனப் படத்தின் டீட்டெய்லிங் நச் ரகம். ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுங் காங் நிஜத்தில் ஜப்பானியர் இல்லை எனினும், அது மைனஸாகத் தெரியாதவாறு அவர் படத்தில் ஸ்கோர் செய்திருந்தார். மற்ற ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படங்களுடன் ஒப்பிடும்போது, ஓரளவுக்குக் கனமான கதை மற்றும் நிறைய அதிவேக டிரைவிங் காட்சிகளுடன்கூடிய படமாக இது இருந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

சென்னா (2010) - ஐஎம்டிபி ரேட்டிங்: 8.5

Senna
Senna
imdb

ஆசிஃப் கபாடியாவின் இந்த டாகுமென்ட்டரி, பார்ப்பவரின் மனதை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். ஏனெனில், பிரேசிலைச் சேர்ந்த அர்டன் சென்னாவின் F1 அறிமுகத்தில் தொடங்கி, அவரின் மரணத்தில் இது முடியும் (1994 சான் மரியோன் கிராண்ட் ஃபிரிக்ஸ்). இடையிடையே பல வீடியோ காட்சிகள் மற்றும் தரவுகள், பேட்டிகள் என விரியும் இந்த டாகுமென்ட்டரியை முழுக்கப் பார்த்துவிட்டு அழாமல் இருப்பவர்கள் சொற்பமே. தவிர அர்டன் சென்னாவின் போட்டியாளரான அலைன் ப்ராஸ்ட்டுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் மெக்குவின்: த மேன் அண்டு த லே மான்ஸ் (2015) - ஐஎம்டிபி ரேட்டிங்: 6.8

Steve Mcqueen
Steve Mcqueen
imdb

1971-ல் வெளிவந்த லே மான்ஸ் திரைப்படத்தின் (ஐஎம்டிபி ரேட்டிங்: 6.8) உருவாக்கத்தில் நடந்த விஷயங்களை டாகுமென்ட்டரியாக எடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், அதற்கான 'கிங் ஆஃப் கூல்' ஸ்டீவ் மெக்குவின்னின் உழைப்பு எத்தகையது என்பதை இது தெரிவிக்கிறது. அந்தக் காலகட்டத்திலேயே ஸ்டைலான மேக்கிங்கில் அந்தப் படம் இருந்தது. போர்ஷே 917 மற்றும் ஃபெராரி 512 ஆகிய கார்கள், லே மான்ஸ் போட்டி நடைபெறும் Circuit de la Sarthe ரேஸ் டிராக்கின் 6 கி.மீ நீள நேர்ப்பாதையில் (Mulsanne Straight) வேகப்போட்டி வைத்துக்கொள்வதில் இந்த டாகுமென்ட்டரி தொடங்கும்! அதுவே, இது எடுக்கப்பட்ட நோக்கத்தை விளக்கிவிடுவதுடன் 1970-களில் நடைபெற்ற ரேஸ்களின் வீடியோக்கள் அதில் அப்படியே இடம்பெற்றிருப்பது ஆச்சர்யம்தான். லே மான்ஸ் படப்பிடிப்பின்போது இரு டிரைவர்கள் இறந்துபோனது வருத்தமான விஷயமே.

ரோனின் (1998) - ஐஎம்டிபி ரேட்டிங்: 7.3

Ronin
Ronin
imdb

அதிவேக கார் சேஸிங் காட்சிகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இப்படமும் நிச்சயம் பிடிக்கும். பிஎம்டபிள்யூ M5 மற்றும் ஆடி S8 ஆகிய கார்கள் வரும் இரு சேஸிங் காட்சிகள் வேற லெவலில் இருக்கும்! ராபர்ட் டீ நீரோ கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், உளவாளிகள், கூலிப்படை, துப்பாக்கிகள் போன்ற விஷயங்களைப் பற்றிய கதைக்கருவைக் கொண்டுள்ளது.

வில்லியம்ஸ் (2017) - ஐஎம்டிபி ரேட்டிங்: 7.6

Williams
Williams
imdb

ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்டரியான இது, வில்லியம்ஸ் ஃபார்முலா ஒன் டீமின் நிறுவனரான சர் ஃபிராங்க் வில்லியம்ஸ் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறது. மோர்கன் மேத்யூஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், வில்லியம்ஸ் F1 அணி உருவான விதம், ஒரு விபத்தால் சர் ஃபிராங்க் வில்லியம்ஸ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது மற்றும் அதற்குப் பிந்தைய அவரின் வாழ்வியல் ஆகியவற்றைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமுள்ளவர்கள், இந்தப் படத்தைத் தவறவிட வேண்டாம். தற்போது நிகழ்காலத்தில் வில்லியம்ஸ் F1 அணி, அதன் மோசமான ஃபார்மிலிருந்து வெளிவந்து, நடப்பு சீசனில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் என நம்பலாம்.

F1: டிரைவ் டூ சர்வைவ் (2019) - ஐஎம்டிபி ரேட்டிங்: 8.6

F1: Drive To Survive
F1: Drive To Survive
imdb

நெட்ஃபிளிக்ஸில் டாகுமென்ட்டரி சீரிஸாக வரும் இது, ஃபார்முலா ஒன் போட்டி எவ்வளவு கடினமானது என்பதை விளக்குகிறது. தற்போது இரு சீஸன்கள் வந்திருக்கும் நிலையில், அவை முறையே 2018 மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பின் பின்னால் நடந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு சீஸனும் 10 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்பதால், இதைப் பார்க்கும்போது நேரம் செல்வதே தெரியாது.

கார்ஸ் (2006-2011-2017) - சராசரி ஐஎம்டிபி ரேட்டிங்: 6.6

Cars
Cars
imdb

கார்களைப் பற்றிய படங்களைப் பற்றிப் பேசுகையில், கார்ஸ் என்ற பெயரில் வந்த படத்தைச் சேர்க்காமல் எப்படி விட முடியும்? குழந்தைகளைக் கவரும் விதமாக வெளியான இந்த அனிமேஷன் படம், கார்கள் பேசினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டது (ஹாலிவுட் படங்களில் விலங்குகளை மட்டும்தான் பேசவைக்க முடியுமா என்ன?). இந்த சீரிஸில் வந்த மூன்று படங்களும், கார் நாயகனான லைட்னிங் மெக்குவின் தனது நிகழ்வாழ்வில் எப்படிப் பக்குவப்படுகிறது என்பதை எளிதாக உணர்த்தும். இதனுடன் வரும் கார் கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி அமைந்திருப்பதால், கேளிக்கையான திரை அனுபவம் உறுதி.

டிரைவ் (2011) - ஐஎம்டிபி ரேட்டிங்: 7.8

Drive
Drive
imdb

நியோ நாய்ர் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஹாலிவுட்டின் செல்லப்பிள்ளையான ரையன் கொஸ்லிங் நடித்திருந்தார். ஆக்‌ஷன் பிரியர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்ட இது, எதிர்பார்த்தபடியே விஷுவலாக மிரள வைக்கிறது. ஸ்டன்ட் மேன் மற்றும் கெட்-அவே டிரைவராக இருக்கும் ஒருவர், தன் காதலியை மீட்பதற்காக எப்படி சட்டத்தின் மறுபக்கத்துக்கு சென்றுவருகிறார் என்பதே படத்தின் ஒன்லைன்.