"சிங்கிள் சார்ஜில் 200 கி.மீ ஓட்டினால்... ஓலா ஸ்கூட்டர் பரிசு! - ஓலா தொழிற்சாலைக்கு நேரடி விசிட்!

இதுவரை நான் பல ஃபேக்டரி விசிட்களுக்குச் சென்றுள்ளேன். என்ட்ரன்ஸிலேயே செல்போன் கேமராவில் ஸ்டிக்கரெல்லாம் ஒட்டிவிட்டுத்தான் உள்ளே விடுவார்கள். இங்கே அப்படி இல்லை. மீடியாவுக்கு மட்டும்தான் அழைப்பு என்று நினைத்தேன். ஆனால், வாடிக்கையாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது ஓலா.
எதிர்பார்த்துக் காத்திருந்தபோது வரவில்லை; திடீரென ஓலாவின் ஃபேக்டரி விசிட்டுக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்வைட் வந்ததும் சட்டு புட்டுனு கிளம்பி விட்டேன் கிருஷ்ணகிரிக்கு. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எனும் இடத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மொழிற்சாலை.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் மொபிலிட்டி செயல்படுவதே பெருமைதான். சுமார் 500 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருந்தது ஓலா. தொழிற்சாலை முகப்பிலேயே ஏகப்பட்ட ஓலா ஸ்கூட்டர்கள் டெலிவரிக்காகக் கண் சிமிட்டின. மீடியாவுக்கு மட்டும்தான் அழைப்பு என்று நினைத்தேன். ஆனால், வாடிக்கையாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது ஓலா. சுமார் 1,800–க்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள். எல்லோருமே ஓலா ஸ்கூட்டர் ஓனர்கள்.

வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை எந்த நிறுவனமுமே வழங்கியதில்லை. அட, அதை விட கேமராக்களுக்குத் தடா போடவில்லை ஓலா. இதுவரை நான் பல ஃபேக்டரி விசிட்களுக்குச் சென்றுள்ளேன். என்ட்ரன்ஸிலேயே செல்போன் கேமராவில் ஸ்டிக்கரெல்லாம் ஒட்டிவிட்டுத்தான் உள்ளே விடுவார்கள். இங்கே அப்படி இல்லை. ‘விக்ரம்’ பட ஓப்பனிங் மாதிரி செம கூட்டமாக இருந்தது. ‘ஓ… ஓ… ஓலா’ என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் உற்சாகத்துக்கு இன்னொரு காரணமும் இருந்தது.
சிங்கிள் சார்ஜில் 200 கிமீ ஓட்டிய ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கு, ஒரு ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் பரிசளிப்பதாக அறிவித்திருந்தார் ஓலா தலைவர் பவிஷ் அகர்வால். ஓலாவின் ரேஞ்ச் பற்றி பலவித விமர்சனங்கள் இருந்தாலும்… ஏகப்பட்ட பேர் 200 கிமீ ஓட்டியிருந்தது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. 10 அல்லது 20 பேருக்குத்தான் அந்த ரேஞ்ச் கிடைக்கும் என்று நினைத்தால்… 100–க்கும் மேற்பட்டோர் அந்த ரெக்கார்டில் இருந்தார்கள். அவர்களில் 100 பேரைத் தேர்ந்தெடுத்து ஓலா ஸ்கூட்டர் பரிசளிப்பு விழாவும் நடந்தது தொழிற்சாலையில்!

தமிழ்நாடு மட்டுமில்லை; கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா என்று ஏகப்பட்ட மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.
பெயின்ட் ஷாப், பாடி ஷாப், பேட்டரி, மோட்டார், கடைசியாக அசெம்பிளி லேன் என்று எல்லா ஏரியாக்களிலும் சுற்றிக் காட்டினார்கள். எல்லோர் முகத்திலும் எக்ஸைட்மென்ட். கூட்டம் அதிகமாக இருந்ததால்… குழுக்களாக அனுப்பினார்கள். சாஃப்ட்வேர் அப்டேட்டும் செய்தார்கள்.
ஓலாவை இன்னொரு விஷயத்திலும் பாராட்ட வேண்டும் – இங்கே ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக அசெம்பிளி லைனில் இருக்கிறார்கள். அழகாக மட்டுமில்லை; பெண்கள் ஸ்கூட்டர்களை அசெம்பிள் செய்யும் விதம் அற்புதமாகவும் இருந்தது. நான் லைவ் போட்டுக் கொண்டிருந்தபோதே, கமென்ட் பாக்ஸில் ‘ஓலாவில் எப்படி ஜாப் அப்ளை செய்வது’ என்றெல்லாம் கமென்ட்கள் வந்தன.

தமிழ்நாட்டில் இதுதான் மிகப் பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை. இப்போதைக்கு அதிக திறன் கொண்ட எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்தான் அசெம்பிளி லைனில் முக்கியமான ஸ்கூட்டராக இருக்கிறது
இந்த நிகழ்வின்போது ஓலாவைக் கொண்டாடுபவர்கள் எக்கச்சக்கம் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆம், ஒரு வாகன நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள்தானே முக்கியம்! அதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது ஓலா!