ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டாப் 5 வெயிட்டிங் பீரியட் கார்கள்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

4 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை...

1991 - ல் இந்திய அரசு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது. இந்தப் பொருளாதாரக் கொள்கை மூலம் பன்னாட்டுக் கார் கம்பெனிகள் இந்தியாவுக்குள் நுழைந்தன. அதற்கு முன்னர் வரை, ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் புக்கிங் செய்துவிட்டு குறைந்தது 4 - 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதாவது, பொங்கலுக்கு புக்கிங் செய்தால், தீபாவளிக்குத்தான் கிடைக்கும். இன்றும் சில கார்களுக்கு அவ்வாறான காத்திருப்புக் காலம் (waiting period) உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்து, மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் அடித்ததால் அதிக வெயிட்டிங் பீரியட் உள்ள ஐந்து கார்களை, இந்த இதழ் டாப் 5-ல் பார்ப்போம்.

மஹிந்திரா XUV 700
மஹிந்திரா XUV 700

மஹிந்திரா XUV 700 – 21 மாதங்கள் வரை

தற்போது இந்தியச் சந்தையில் விற்பனையில் உள்ள கார்களிலேயே அதிகக் காத்திருப்புக் காலத்தைக் கொண்டுள்ளது மஹிந்திராவின் XUV 700தான். இதன் டாப் வேரியன்ட்டில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் சிறப்பம்சங்கள் உள்ளன. ஏற்கனவே உலகளவிலான சிப் ஷார்ட்டேஜ் உள்ளதால், இந்த வகை மாடல்களுக்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் (21 மாதங்கள்) வரை டெலிவரி எடுக்கக் காத்திருக்க வேண்டும்! இருப்பினும், XUV 700 - ன் சிறப்பம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜினுக்கு, தீபாவளி சமய எக்ஸ்பிரஸ் ரயில் போல வெயிட்டிங் லிஸ்ட் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

கியா காரன்ஸ்
கியா காரன்ஸ்

கியா காரன்ஸ் - 18 மாதங்கள் வரை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா காரன்ஸ், குறுகிய காலகட்டத்திலேயே மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தக் கொரிய MPV-ன் 1.5L பெட்ரோல் வேரியன்ட்டுகளின் காத்திருப்புக் காலம் ஒன்றரை வருடங்களை எட்டுகிறது. மற்றபடி 1.4L டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5L டர்போ-டீசல் மாடல்களுக்கு, டெலிவரி எடுக்க எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா - 6 மாதங்கள் வரை:

இந்தியச் சந்தையில் தொடர்ந்து அதிக விற்பனையாகும் மிட் சைஸ் எஸ்யூவி என்றால், அது ஹூண்டாய் க்ரெட்டாதான். இதன் பேஸ் மாடலின் காத்திருப்புக் காலம், ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது! மற்ற மிடில் மற்றும் டாப் வேரியன்ட்டுகள் 1 - 3 மாதங்களில் டெலிவரி கிடைக்கும். எனவே, க்ரெட்டா வாங்க முடிவெடுத்து இருப்பவர்கள், சிறிது அதிகம் செலவழித்து உயர் வேரியன்ட்டை புக் செய்யுங்கள்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் – 4 மாதங்கள் வரை

ஏற்கெனவே இந்தியச் சந்தையில் ‘லெஜெண்ட்’ ஸ்டேட்டஸை அடைந்துவிட்டதோடு, தற்போது ஃபோர்டு எண்டேவரும் போட்டிக்கு இல்லை என்பதால், அதிக காத்திருப்புக் காலத்தைக் கட்டளையிடுகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர். இந்தப் பெரிய எஸ்யூவியின் ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜெண்டர் எடிஷனுக்கும், முன்பதிவு செய்த நாளில் இருந்து நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

மாருதி சுஸூகி எர்டிகா
மாருதி சுஸூகி எர்டிகா

மாருதி சுஸூகி எர்டிகா : 4 - 9 மாதங்கள்

மாருதி எர்டிகா, கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இந்தியச் சந்தையில் பிரபலமான எம்பிவி. கொடுக்கும் காசுக்கு ஏற்ற வசதிகளின் காரணமாக மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் நன்மதிப்பு உள்ளது. இங்கே உள்ள டீலர்களிடம் விசாரித்தபோது, நான்கு மாதங்கள் வரை காத்திருப்புக் காலம் இருக்கும் என தெரிவித்தனர். அதேசமயம் வடக்கில் ‘Tour M’ என்ற பெயரில் எர்டிகாவின் CNG வகை மாடல்களை டாக்ஸி மார்க்கெட்டுக்கு விற்பனை செய்து வருகிறது மாருதி. இதன் காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்கள் வரை உள்ளது!