கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எர்டிகா - க்வெஸ்ட் ஆகுது; சியாஸ் - பெல்ட்டா ஆகுது!

Corolla Quest
பிரீமியம் ஸ்டோரி
News
Corolla Quest

ஸ்கூப் நியூஸ்: டொயோட்டா கார்கள்

டிஜிட்டர் ரெண்டரிங்: ச.திவ்யா

டொயோட்டா, தனது யாரிஸ் செடானின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அதே சமயம், அடுத்த சில மாதங்களுக்குத் தொடர்ந்து யாரிஸை விற்பனை செய்யும் அளவுக்கு டொயோட்டா இன்னும் ஸ்டாக் வைத்திருப்பதாக டீலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், `​பெல்ட்டா’ என்ற பெயரில் ரீபேட்ஜிங் செய்யப்பட்ட மாருதி சியாஸை, ஆகஸ்ட் மத்தியில் டொயோட்டா தனது ஷோரூம்களுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய செடான்களுக்கு நடுவே பெல்ட்டாவைக் களம் இறக்க முடிவு செய்திருக்கிறது டொயோட்டா.

டொயோட்டா பெல்ட்டா
டொயோட்டா பெல்ட்டா

டொயோட்டா பெல்ட்டா - என்ன எதிர்பார்க்கலாம் ?

மாருதி சியாஸுக்கும் டொயோட்டாவின் பெல்ட்டாவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. அதே 105bhp, 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், SHVS மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பெல்ட்டா. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியன்ட்டிலும் பெல்ட்டா வரும்.

கிளான்ஸா மற்றும் அர்பன் குரூஸர் எப்படி பெலினோ, பிரெஸ்ஸாவைவிட சற்றே விலை அதிகமாக இருந்ததோ, அதேபோலவே, டொயோட்டாவின் பெல்ட்டாவும் சியாஸைவிட சற்று விலை அதிகமாக இருக்கும்.

கரோலா க்வெஸ்ட் (Corolla Quest) என்ற பெயரில் மாருதியின் எர்டிகாவை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்குக் கொண்டு வரவும் டொயோட்டா திட்டம் தீட்டி வருகிறது.

Corolla Quest
Corolla Quest