கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டொயோட்டாவின் RAV4 இந்தியாவுக்கு வருது!

டொயோட்டா RAV4
பிரீமியம் ஸ்டோரி
News
டொயோட்டா RAV4

ஸ்கூப் நியூஸ்: டொயோட்டா RAV4

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டொயோட்டாவின் மிட் சைஸ் SUV ஆன RAV4 இந்தியாவில் இப்போது டெஸ்ட்டிங்கில் உள்ளது. கடந்த ஆண்டு அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும்போது, RAV4 - யையும் இந்தியாவுக்குக் கொண்டு வர டொயோட்டா பரிசீலித்து வருவதாகப் பேச்சுகள் அடிபட்டன.

பின்னர் டொயோட்டாவும் மாருதியும் இணைந்து ஹூண்டாய் க்ரெட்டா உடன் போட்டி போடும் மிட் சைஸ் எஸ்யூவியை உருவாக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இப்போது RAV 4 டெஸ்ட்டிங்கில் இருப்பதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாக வருகிறது.

டொயோட்டா RAV4: இன்ஜின் விவரங்கள்

RAV4-ன் சர்வதேச மாடலில், கேம்ரியில் இருக்கும் அதே 2.5 லி பெட்ரோல் இன்ஜின் + எலெக்ட்ரிக் மோட்டார் காம்போதான் உண்டு. இந்த செட்அப்பில் இன்ஜினும் மோட்டாரும் சேர்ந்து வேலை செய்யும்போது, உச்சபட்சமாக 215bhp@5,700rpm பவரையும், 221Nm@3600rpm டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஆனால், நம் ஊர் ஷோரூம்களை இது வந்தடையும்போது, யாரிஸில் இருக்கும் பெட்ரோல் இன்ஜினுடன் RAV4 வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், யாரிஸில் 106 bhp-யை வெளிப்படுத்தும் அந்த 1.5 லி VVT-i இன்ஜினை அதிக பவரை வெளிப்படுத்தும் வகையில் டொயோட்டா ட்யூன் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

வேறு என்ன ஸ்பெஷல்?

இந்தியச் சந்தைக்காக மாருதியுடன் கூட்டுச் சேர்ந்து இது தயாரிக்கப்படுவதால், டொயோட்டா - மாருதி என இரண்டு கம்பெனி ஷோரூம்களிலும் இது விற்பனைக்கு வரும். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை மாருதியின் வெர்ஷனில் எஸ்-க்ராஸ், XL6-ல் வரும் அதே எளிமையான இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்துடன் வெளிவரும். இதனால் ஹூண்டாய் க்ரெட்டாவைவிட விலை குறைவாகக் கொண்டு வந்து பலத்த போட்டியை ஏற்படுத்தலாம்.

அதேசமயம், டொயோட்டா வேரியன்ட்டில் ப்ரீஸ்டாண்டிங் இன்போடெய்ன்மென்ட் சிஸ்டத்துடன் டேஷ்போர்டு பிரமாண்டமாக இருக்கும்.

டொயோட்டா RAV4
டொயோட்டா RAV4