Election bannerElection banner
Published:Updated:

Used Car விற்பனைதான் இப்போது ட்ரெண்டு... கொரோனா கால கார் பராமரிப்பு!

யூஸ்டு கார் மார்க்கெட்
யூஸ்டு கார் மார்க்கெட்

Used Car "லாக்டெளனில் இந்தத் தொழில் என்னைக் கைவிடவே இல்லை. போன இந்த 2 மாசத்தில் மட்டும் 25 கார் விற்பனை ஆகியிருக்கு"

"கள்ளக்குறிச்சியில் இருக்கேன். விழுப்புரத்தில்தான் வேலை. எனக்கு கார் ஓட்டத் தெரியும். இப்போ அதுக்காகவே ரொம்பக் குறைஞ்ச விலைக்கு ஒரு ஃபிகோ டீசல் கார் வாங்கிட்டேன்'' என்றார் நந்தகுமார் என்பவர்.

இந்தியாவில் மட்டுமில்லை; உலக அளவிலும் யூஸ்டு கார் விற்பனைதான் ட்ரெண்டு ஆகியிருக்கிறது. "ப்ளீஸ், பொதுப்போக்குவரத்தைத் தவிருங்கள்; சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். சொந்த கார் பயன்படுத்துங்கள்'' என்று லண்டன் பிரதம மந்திரியே சொல்லிவிட்டார்.

AICDA (All India Cars Dealers Association) நிறுவனத்தின் அசோஸியேட் டைரக்டர் இந்த லாக்டெளனின்போது நடத்திய வெபினாரில் இப்படிச் சொன்னார். "கொரோனா லாக்டெளன் மற்ற துறைகளுக்கு எப்படியோ… பழைய கார் மார்க்கெட்டுக்குத் திருவிழாதான்!"

லாக்டவுனால் பொதுப் போக்குவரத்து கம்யூட்டிங் பார்ட்டிகள் எல்லோரும் இப்போது கார்களைத்தான் நம்பியாக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பழைய கார் மார்க்கெட் இப்போது மீண்டு கொண்டிருக்கிறது.

யூஸ்டு கார்
யூஸ்டு கார்

சென்னை போரூரில் பழைய கார் ஷோரூம் வைத்திருக்கும் அஹமது, "எங்களுக்கு அதிகமாக விற்பனையாகிற கார்கள் இந்த பட்ஜெட்டில்தான். அதாவது 3- 5 லட்சம் வரைக்கும்தான். ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களும், காம்பேக்ட் செடான்களும்தான் இதில் அதிகம்.'' என்கிறார்.

அதற்காக எம்பிவி, எஸ்யூவிகளும் விற்பனையில் சோடை போகவில்லை. ஈரோட்டில் பழைய கார் மார்க்கெட்டில் தனிநபர் டீலராகச் செயல்படும் சரவணக்குமார், "லாக்டெளனில் இந்தத் தொழில் என்னைக் கைவிடவே இல்லை. போன இந்த 2 மாசத்தில் மட்டும் 25 கார் விற்பனை ஆகியிருக்கு. இதில் இனோவா க்ரிஸ்ட்டா கார் மட்டுமே 16 கார்கள் போயிருக்கு. பழைய இனோவாவுக்கு இப்போ மவுசு போயிடுச்சுனு நினைக்கிறேன். க்ரிஸ்ட்டாதான் இப்போ கெத்து. அதுக்கப்புறம் ஹோண்டா சிட்டி பெட்ரோலுக்குத்தான் மவுசு!'' என்கிறார்.

`வெந்ததோட போய் விடிய விடிய தைச்சுட்டு வந்தது' என்று வடிவேலு சொல்வதுபோல், இந்த ஊரடங்கு நேரத்திலும் ஒருவர் அவசரப் பயணத்துக்காக 80,000 ரூபாய்க்கு, யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஒரு பழைய ஆல்ட்டோ வாங்கிவிட்டார்.

"சார், அவசரமா கார் வாங்கணும். எது வாங்கலாம்?'' என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் நமக்கும் ஏகப்பட்ட வாசகர்கள் போன் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பட்ஜெட் 2 முதல் 3 லட்சத்துக்குள் இருப்பதால், இவர்கள் எல்லாமே முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் என்பதும் தெரிகிறது.

அப்படியென்றால், பழைய கார் மார்க்கெட்டுக்கு இந்த லாக்டெளன் - வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா? - மோட்டார் விகடன் இதழில் முழுமையான சிறப்புக் கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... > எகிறும் பழைய கார் மார்க்கெட்.... கைகொடுத்த லாக்டெளன்! https://bit.ly/38GXFDj

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

எகிறும் பழைய கார் மார்க்கெட்.... கைகொடுத்த லாக்டெளன்!

கார் பராமரிப்பு... லாக்டெளன் டிப்ஸ்

கொரோனா காலத்தில் முகக்கவசம், சானிட்டைஸர்... எல்லாம் எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு காரைப் பயன்படுத்தும்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

கூட்டம் கவனம்!

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நீங்கள் கடைக்குச் சென்றாலும், அங்கே கூட்டம் இருக்கும் பட்சத்தில் - வண்டியைக் கூட்டத்திற்கு இடையில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், நாம் கடைக்குள் சென்ற நேரம் காரை யார் வேண்டுமானாலும் தொட்டிருக்கக் கூடும். காரில் யார் வேண்டுமானாலும் சாய்ந்திருக்கக் கூடும். இதை மனதில் வைத்துக் கொண்டு காரைப் பயன்படுத்துங்கள்.

காருக்குள் எப்பொழுதுமே கையுறைகளும், சில முகக் கவசங்களும் இருப்பது அவசியம். பலருடன் சேர்ந்து பயணிப்பதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் பல பேரை காரில் ஏற்ற வேண்டியதாக இருந்தால்... உடன் பயணிக்கும் நபரும் போதுமான அளவு எச்சரிக்கையோடு முகக்கவசம் அணிந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

 லாக்டெளன் டிப்ஸ்
லாக்டெளன் டிப்ஸ்

> கைகள் மட்டுமல்ல; வாகனமும் சுத்தமாய் இருக்க வேண்டும்... எதற்கு? எப்படி?

> சானிட்டைஸர்... கவனம் தேவை

> வேகம், விவேகம் இல்லை!

> மின்னணு பரிவர்த்தனை

> கார் வாங்க நினைப்பவர்கள் கவனத்துக்கு...

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

காருக்குள் சானிட்டைஸர் இருக்கலாமா?

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு