Published:Updated:

ஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்? #DoubtOfCommonMan

LED Headlight
News
LED Headlight ( Yamaha )

ஹெட்லைட்களில் கறுப்பு நிற ஸ்டிக்கரை டீலர்களே ஒட்டிவிடுவார்கள். ஆனால், அது வாகனத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்துக்கொண்டு, பலர் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுகிறார்கள்.

Published:Updated:

ஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்? #DoubtOfCommonMan

ஹெட்லைட்களில் கறுப்பு நிற ஸ்டிக்கரை டீலர்களே ஒட்டிவிடுவார்கள். ஆனால், அது வாகனத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்துக்கொண்டு, பலர் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுகிறார்கள்.

LED Headlight
News
LED Headlight ( Yamaha )

இரவில் மட்டுமல்ல, பகலிலும்கூட இப்போதெல்லாம் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பறக்கின்றன வாகனங்கள். 'பளிச்'சென எரிந்து கண்ணைக்கூச வைக்கும் ஹெட்லைட்களால் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. "இதைத் தடுக்க முடியாதா? வாகனங்களின் முகப்பு விளக்குகளில் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய கறுப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டுவது கட்டாயம் என்கிறார்கள். ஆனால் புதிய வாகனங்களிலும் அரசு பேருந்துகளிலும் போக்குவரத்து வாகனங்களிலும் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவதில்லையே? பிறகெப்படி அவை RTO அலுவகங்களில் பதிவு செய்யப்படுகின்றன?. தற்போது LED விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?" என்று விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வியெழுப்பியிருக்கிறார், தீ. மகாலிங்கம் என்ற வாசகர்.

Headlight
Headlight
Skoda

வாகனங்களின் ஹெட்லைட்டில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது, ஏற்கெனவே அமலில் இருக்கும் விதிமுறைதான். ஆனால் இது முறையாகப் பின்பற்றப்படாத சூழலே நிலவுகிறது. கடந்த மார்ச் மாதம், 'இரண்டு வாரங்களுக்குள்ளாக, அனைத்து மோட்டார் வாகனங்களில் உள்ள ஹெட்லைட்டின் மையப்பகுதியில், கறுப்பு ஸ்டிக்கரை ஒட்டிவிடவேண்டும்' என மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருந்தது. பொதுவாக, பைக், கார், ஆட்டோ, வேன், லாரி, பஸ் என எந்த வாகனமாக இருந்தாலும், புதிய வாகனங்களை டெலிவரி செய்யும்போது, அதன் ஹெட்லைட்களில் கறுப்பு நிற ஸ்டிக்கரை டீலர்களே ஒட்டிவிடுவார்கள். ஆனால் அது வாகனத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்துக்கொண்டு, பலர் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுகிறார்கள். தேவையின்றி ஹை-பீமில் ஹெட்லைட்டை இயக்கும்போது, அது எதிர்திசையில் பயணிப்பவருக்குப் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதைப் பலர் உணர்வதேயில்லை.

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan
Vikatan

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களின் ஹெட்லைட்களும், வண்டியை ஆன் செய்த மாத்திரத்திலேயே எரியத் தொடங்கிவிடும். அதாவது Always Headlamp On (AHO) பாணியில் இயங்குவதால், ஹெட்லைட்டை ஆஃப் செய்ய முடியாது; வேண்டுமென்றால் Low Beam/High Beam ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இது பேட்டரி மற்றும் பல்பின் ஆயுளையும் மற்றும் வாகனத்தின் மைலேஜையும் குறைக்கிறது எனப் புகார்கள் எழுந்ததால், சில வாகனங்களில் DRL எனப்படும் 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்' பொருத்தப்படுகிறது. இவை கார்களைப் பொறுத்தமட்டில், அதன் ஸ்டைலை மெறுகேற்றும் அம்சமாகவே இருந்து வருகிறது.

Halogen Bulb
Halogen Bulb
Honda

வழக்கமான ஹெட்லைட்டின் வெளிச்சம் போதவில்லை என்பதற்கான தீர்வாக வந்தவைதான் LED ஹெட்லைட்ஸ். இவை பல்ப்களைவிடக் குறைவான மின்சாரத்தை எடுத்துக்கொள்வதுடன், இவை இயல்பாகவே அதிக வெளிச்சத்தை உமிழும் திறன்கொண்டவை. ஒருகாலத்தில் பிரிமியம் கார்கள்/பைக்குகளில் மட்டுமே இருந்த இந்த வகை லைட்கள், தற்போது பட்ஜெட் வாகனங்களுக்குக்கூட வந்துவிட்டன. டூ-வீலர்களின் ஹாலோஜன் பல்ப் கொண்ட ஹெட்லைட்டுடன் ஒப்பிடும்போது, LED ஹெட்லைட்டின் நடுப்புறத்தைக் கணிக்க இயலாது; Strip போல அவை இருப்பதால், அதில் எங்கே கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது?