கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ரெட்ரோ ஸ்டைல் யமஹா!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஃபர்ஸ்ட் லுக்: யமஹா FZ-X

விலை: `1.34 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

யமஹாவின் XSR மாடல் பற்றிய பேச்சுக்களே அதிகம் அடிபட, சத்தமில்லாமல் இந்தியாவில் FZ-X மாடல் பைக்கைக் களமிறக்கியிருக்கிறது யமஹா. ஸ்போர்ட்டி டிசைனில் இருந்து கொஞ்சம் மாறி ரெட்ரோ ஸ்டைலில் பைக்குகளைத் தயாரிக்கலாம் என்ற யமஹாவின் முடிவுக்கு ஒரு தம்ஸ் அப். XSR 125 பற்றிய அப்டேட்களுக்கு எதிர்பார்த்திருந்த வேளையில் எதிர்பாராமல் வெளியாகியிருக்கும் FZ-X எப்படி இருக்கிறது, என்னென்ன வசதிகள், சிறப்பம்சங்களை எல்லாம் புதிய FZ-X-க்குக் கொடுத்திருக்கிறது யமஹா? பார்க்கலாம்.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா!


புத்தம் புதிய தோற்றம்:

புதிய FZ-X பைக்கை, கொஞ்சம் ரெட்ரோ ஸ்டைல், கொஞ்சம் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் என எல்லாம் கலந்த கலவையாகக் கொடுத்திருக்கிறது யமஹா. ஸ்டாண்டர்டு FZ-யில் இருந்து முழுவதுமாக வெளித்தோற்றத்தை மாற்றியிருக்கிறது யமஹா. வட்ட வடிவ எல்இடி DRL, அதனைச் சுற்றி வட்ட வடிவ முகப்பு விளக்கு என பைக்கின் முகப்புப் பக்கமே கொஞ்சம் க்ளாஸிக்கான பீலைத் தருகிறது. போர்க் கெய்ட்டர்ஸ் மற்றும் ப்ளாஸ்டிக் சம்ப் ஃகார்ட் இரண்டும் கொஞ்சம் ஸ்க்ராம்ப்ளர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பழைய FZ-ஐ விட ப்யூல் டேங்க்கை கொஞ்சம் உயர்த்தி வைத்திருக்கிறது யமஹா. சீட்டைப் பொறுத்தவரை ப்ளாட்டாகவும், பழைய FZ-ஐ விட 20 மிமீ அதிகமாக 810 மிமீ உயரத்திலும் இருக்கிறது. ஹேண்டில் பாரும் உயர்ந்திருக்கிறது புதிய FZ-X-ல். உயரமாகவும் தட்டையான சீட்டும் கொண்டிருப்பதால், நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்டும் வகையிலேயே இருக்கும்.

சிறப்பம்சங்கள்:

புதிய FZ-X முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டேஷ்போர்டோடு, புளூடூத் கனெக்டிவிட்டி வேரியன்ட்டுடனும் வெளியாகியிருக்கிறது. சாதாரண வேரியன்டை விட ப்ளூடூத் வேரியன்ட் 3000 ரூபாய் அதிகம். இரண்டு வேரியன்ட்களிலும் சிங்கிள் சேனல் ABS ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. புளூடூத் கனெக்டிவிட்டியின் மூலம், பைக்கின் டேஷ்போர்டிலேயே இன்கமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட், மொபைல் செயலியில் பார்க்கிங் ஹிஸ்டரி போன்ற வசதிகளைப் பெற முடியும்.

முழுக்க டிஜிட்டல் மயம். புளுடூத் உண்டு.
முழுக்க டிஜிட்டல் மயம். புளுடூத் உண்டு.


மாறாத இன்ஜின் மற்றும் சேஸி, கூடிய எடை:

FZ-X-யைப் பொருத்தவரை முந்தைய FZ-ல் இருந்து வெளித்தோற்றத்தை மட்டுமே முழுமையாக மாற்றியமைத்திருக்கிறது யமஹா. இன்ஜினைப் பொறுத்தவரை சிறிதும் மாற்றம் இல்லாத 7,250 rpm-ல் 12.4 bhp பவர் மற்றும் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய அதே சிங்கிள் சிலிண்டர் 149 சிசி இன்ஜின்தான், 5 ஸ்பீடு கியர்பாக்ஸோடு இருக்கிறது. 150 - 160 செக்மென்ட்டிலேயே மிகவும் குறைவான பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் இன்ஜின் இது தான்.

முன்னர் கூறியதுபோல வெளித்தோற்றம் போலவே, சேஸியிலும் எந்த மாற்றமும் இல்லை. சிங்கிள் டவுன்டியூப் ஃப்ரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவையே புதிய FZ-X-லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வட்ட வடிவ ஹெட்லைட்.. செம ஸ்டைல்!
வட்ட வடிவ ஹெட்லைட்.. செம ஸ்டைல்!புதிய FZ-X-ன் எடை முந்தைய FZ-ஐ விட 4 கிலோ அதிகரித்து, 139 கிலோ இருக்கிறது. இதைவிட குறைவான எடை கொண்ட FZ-யே குறைவான பவர்-டு-வெய்ட் ரேஷியோவைக் கொண்டிருக்கும்போது, புதிய FZ-X-ல் எடையைக் கூட்டியிருப்பது ஓகேவா? வீல்களும் அதே 17-இன்ச் அலாய் வீல்கள்தான். FZ-X-ல் மட்டும் ப்ளாக் பேட்டர்ன் கொண்ட டயர்களைக் கொடுத்திருக்கிறது யமஹா.

கிராப் ரெயில், டெயில் லைட் - க்ளாஸிக் லுக்!
கிராப் ரெயில், டெயில் லைட் - க்ளாஸிக் லுக்!

விலை மற்றும் வெளியீடு:

புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட FZ-S-ஐ விட 9,000 ரூபாய் அதிகமாகவும், ஸ்டாண்டர்டான FZ-ஐ விட 12,000 ரூபாய் அதிகமாகவும் 1.17 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது FZ-X. இந்த விலையில் தனித்துவமான டிசைனைக் கொண்டிருக்கும் FZ-X-க்கு நேரடிப் போட்டியாளர் இனிமேல்தான் ஹோண்டாவில் இருந்து வருவதாகத் தகவல். யமஹா FZ சீரிஸின் 150 சிசி மற்றும் 250 சிசி மாடல்களுக்கு இடையே இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 160 செக்மென்ட்டில் இருக்கும் மற்ற பைக்குகளான RTR 160 4V மற்றும் எக்ஸ்ட்ரீம் 160R ஆகியவற்றை விடக் கொஞ்சம் அதிக விலையில் தான் இருக்கிறது புதிய FZ-X. இதன் ஆன்ரோடு விலை ரூ.1.34 லட்சம் வருகிறது. புதிய FZ-X-ஐ இந்த மாத இறுதியில் இருந்து சாலைகளில் பார்க்கலாம்.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா!