“காலில் செருப்பில்லாம நடந்த ஊரில் காரில் வலம் வருகிறேன்!’’

இணையத்தில் கலக்கும் ‘வில்லேஜ் டாடி’

யது அறுபதைக் கடந்தும் நிலையான வருவாய் இல்லை. குடும்பத்தைக் கரைசேர்க்கத் திண்டாட்டம். அடுத்த வேளை சோற்றுக்கே அவஸ்தைப்பட்ட ஆறுமுகம்தான், இன்று உலகமே வியந்து கொண்டாடும் ‘வில்லேஜ் டாடி’யாக வலம் வருகிறார்; இணையத்தில் கலக்கி வருகிறார்!

‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ என்ற யூடியூப் சேனலில் (bit.ly/vff3) கொட்டிக்கிடக்கும் ஆறுமுகத்தின் சமையல் வீடியோக்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி வைரல் ஹிட். கூகுளுக்கே தெரியாத குட்டி குட்டி நாடுகளில்கூட இந்த வில்லேஜ் டாடிக்குத் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். காட்டுக்குள் அமர்ந்துகொண்டு `கேஎஃப்சி சிக்கன்’ தயாரிப்பதும், ஒரு முழு ஆட்டை வெட்டி முழுசாக வறுத்தெடுப்பதும், ஆயிரம் முட்டைகளைக்கொண்டு பொடிமாஸ் போடுவதும், அருவிக்கரையில் அமர்ந்துகொண்டு நண்டு கிரேவி சமைப்பதும் எனக் கிராமத்துச் சமையலில் ரத கஜ துரக பராக்கிரமராக பவனி வருகிறார் ஆறுமுகம்.

தந்தையின் சமையல் ருசியை உலகுக்குப் படம்பிடித்துக்காட்ட, யூடியூப் சேனலை ஆரம்பித்தார் ஆறுமுகத்தின் மகன் கோபிநாத். கூலி வேலையை நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த குடும்பம்,  இன்றைக்கு  யூடியூப் வருமானத் தின் மூலம் லட்சாதிபதியாகியிருக்கிறது. திருப்பூர் மாநகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள நாச்சிபாளையம் என்ற கிராமத்தில், புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் முடித்து குடிபோயிருக்கும் ‘வில்லேஜ் டாடி’யை அவர் குடும்பத்துடன் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick