உணவு உலா

படங்கள்: லெய்னா

‘பப்பு மம்மு’ என்ற ஒன்றை விழிகள் விரிய, பிறந்து சில மாதங்கள் முதலே நாம் சாப்பிட்டிருப்போம் . ‘அம்மா’, ‘மம்மு’ என்பதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் உச்சரித்த வார்த்தை ‘பப்பு’ தானே?

எங்கிருந்து வந்தது பருப்பு? நம் மூதாதையர் எப்படி பருப்பை விளைவித்து, சமைத்து உண்ணப் பழகினார்கள்? யூஃப்ரட்டிஸ் நதிக்கரை நாகரிக மனிதர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்பே, பருப்பைத் தங்கள் உணவாகப் பயன்படுத்திய தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. மனிதன் நதிக்கரையில் வாழத் தொடங்கியபோதே பருப்பும் கோதுமையும் அரிசியும் விளைவிக்கத் தொடங்கிவிட்டான். பைபிளின் ஆதி யாகமத்தில், தம்பி யாக்கோபுக்குத் தன் மூத்த மகன் எனும் உரிமையை ஒரு கிண்ணம் பருப்புக்கும் சில ரொட்டித் துண்டுகளுக்கும் ஈசா விட்டுக்கொடுத்ததாக வாசிக்கிறோம்.

2500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிக நகரமான ஹரப்பாவின் ஃபர்மானா எனும் இடத்தில் கிடைத்த சுடுமண் பாண்டங்களில் உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற பருப்பு வகைகளின் கஞ்சிப்பசை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. நாகரிகம் தோன்றிய காலம் முதல் நம்மோடு பயணித்துக்கொண்டிருக்கிறது பருப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick