சத்துமாவு... கெத்துமாவு!

ஹெல்த் ஃபுட்ஸ்

மீபத்தில் நமக்குத் தொலைபேசிய வாசகி ஒருவர், ''டாக்டரிடம் சென்றிருந்தபோது... ஹெல்த் டிரிங்க்ஸ், ஓட்ஸ், விலை உயர்ந்த நட்ஸ் என்று என்னவெல்லாமோ குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தில் அனைவரும் எடுத்துக் கொள்வதாக ஒரு பேஷன்ட் கூறினார். சுவாரஸ்யமின்றி தலை யாட்டிக் கொண்டிருந்தார் டாக்டர். அவர் வெளியே சென்றதும், வரிசையில் இருந்த அடுத்த பேஷன்ட், 'சத்துமாவுக் கஞ்சிதான் பிள்ளைகளுக்கு கொடுக்கிறேன் டாக்டர். வேறெதுவும் ஸ்பெஷலா தர்றதில்ல...’ என்று கொஞ்சம் தயங்கியபடி சொல்ல, டாக்டர் முகத்திலோ அவ்வளவு பிரகாசம்! 

'சூப்பர்! தானியங்களைச் சேர்த்துச் செய்ற சத்துமாவை மிஞ்சிய ஆரோக்கிய உணவு எதுவும் இல்ல!’ என்று அவர் பாராட்ட, அந்த அம்மாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்! அடுத்தடுத்து வரிசையில் காத்திருந்த அம்மாக்கள் அனைவரும் அதைக் குறித்துக்கொண்டோம்!'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick