அடுப்பில்லா சமையல்! அவல் ரெசிப்பிகள்

இயற்கை உணவு

''அவள் விகடன் கிச்சன் இதழ் வாசகிகளுக்கு, இம்முறை அவல் ரெசிப்பிகள் வைத்துள்ளேன்!'' என்று சின்னச் சிரிப்புடன் ஆரம்பித்த 'இயற்கை பிரியன்’ இரத்தின சக்திவேல், அவற்றை பகிர்வதற்கு முன் இயற்கை உணவுகளின் மகிமைகளை வலியுறுத்தினார். 

''உலகில் மனித இனம் மட்டுமே, உணவைச் சமைத்து, சிதைத்து, பசி வரும் முன்பே வயிறு வெடிக்கும் அளவுக்கு சாப்பிடும் இனம். அதனால் மனிதர்கள் இலகுவில் நோய்வாய்ப்பட்டு, எதிர்ப்புச்சக்தி குறைந்து, பிணிகளால் அவதிப்படுகின்றனர். வெப்ப சக்தி, அதாவது கலோரி மற்றும் இயக்க சக்தி (எனர்ஜி) பெறுவது மட்டுமே உணவின் பயனல்ல. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும், அழிந்த திசு மூலக் கூறுகள் வெளியேற்றப்பட மற்றும் பிராண சக்தி உயர்த்தப்பட வேண்டும். உணவின் எஞ்சிய கழிவு களும் நீக்கப்பட வேண்டும். இதையெல்லாம் உணவுகள்தான் செய்ய வேண்டும். இதற்கு, ஆரோக்கியத்தைத் தரக்கூடிய இயற்கை உணவுகள்தான் சிறந்த தேர்வு. இத்தகைய உணவுகளில் அவல் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது'’ என்று சொல்லி வியப்பைக் கூட்டும் இரத்தின சக்திவேல், ரெசிப்பிகளை ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick