உப்புக்கறி!

ஸ்பெஷல் ரெசிப்பி

சைலஜா... பிரபல மலை யாளப் புத்தகங்களை, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப் பவர். 'வம்சி’ பதிப்பகத்தின் வெளியீட்டாளரும்கூட. புத்தகங்கள், வாசிப்பு, மொழிபெயர்ப்பு... என்று பிஸியாக இருக்கும் சைலஜாவுக்குள் சுவையான சமையல் கலைஞரும் உள்ளார். அவரைப் பார்க்க வீட்டுக்குச் செல்பவர்களுக்கு அற்புதமான விருந்து நிச்சயம்! அவருடைய சுவையான ரெசிப்பிகளில் ஒன்று, உப்புக்கறி. 

''இந்த ரெசிபியை எனக்கு அறிமுகப்படுத்தினது, சீமான் அண்ணன் (இயக்குநர்). தம்பி நா.முத்துக்குமார் (பாடலாசிரியர்) கல்யாணத்தப்போ, சீமான் அண்ணன் உப்புக்கறி செஞ்சு கொடுத்தார். அப்பப்பா... என்ன ஒரு ருசி! 50 பேருக்குக் கூட சளைக்காம சூப்பரா சமைக்கிற சீமான் அண்ணன், உப்புக்கறி வரலாற்றையும்  சொன்னார். உப்புக்கறிங்கிறது திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதியில பிரபலமான உணவு வகைகள்ல ஒண்ணாம். ராத்திரி நேரங்கள்ல காட்டுக்குப் போறவங்க, அடுத்த வீட்டுக் கோழியைத் திருடுவாங்களாம். அதை சமைக்கிறப்போ வாசனை வந்துடக்கூடாதுனு, தக்காளி, கரம் மசாலானு வாசனை வர்ற பொருட்கள் எதையும் சேர்க்காம சமைக்கிறதுதான் உப்புக்கறியாம். இந்த கதையைச் சொல்லிக்கிட்டே உப்புக்கறியை வடிச்ச சாதத்துல கலந்து ஆளுக்கொரு கைப்பிடி கொடுத்தார் சீமான் அண்ணன். அதுல இருந்து அதுக்கு நான் அடிமை. அந்த ரெசிப்பியை உங்களுக்கும் சொல்றேன்'' என்ற சைலஜா, சமைத்தும் காட்டினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick