ஸ்டார் ரெசிப்பி

ந்த முறை செஃப் மால்குடி கவிதா வழங்கியிருப்பது, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு பிடித்த இரண்டு ரெசிப்பிக்கள்.

நெல்லூர் செப்லா புலுசு

தேவையானவை:


வஞ்சிரம் மீன் - 10 (துண்டுகளாக வெட்டியது)
சின்னவெங்காயம் - கால் கிலோ (உரித்தது)
பூண்டு - 100 கிராம் (தோல் உரித்தது)
நீளமாக நறுக்கிய இஞ்சி - 25 கிராம் (தோல் உரித்தது)
பச்சை மிளகாய் - 5
தக்காளி - அரை கிலோ
மாங்காய் - 5 துண்டுகள்
முருங்கைக்காய் - 5 துண்டுகள்
புளி -  எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -  3
கறிவேப்பிலை -  தேவையான அளவு
எள் எண்ணெய் - 100 கிராம்

வறுத்து அரைக்க:

குண்டூர் மிளகாய் - 3
மல்லித்தூள்(தனியா) -  ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:
வறுக்கக் கொடுத்த பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை வேகவைத்து, தண்ணீர் இறுத்து தோல் உரித்து மிக்ஸியில் போட்டு பியூரி பதத்துக்கு (ஜாம் போல் திக் கிரேவியாக) அரைக்கவும். புளி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கரைத்து திக்காக சாறெடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பச்சை வாசனை போய் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். பிறகு மாங்காய், முருங்கைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் கரைத்து வைத்த புளி, டொமேட்டோ ப்யூரி, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மீன் துண்டுகளைச் சேர்த்து மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும். தேவைக்கேற்ப குழம்பைக் கெட்டியாக்கிக் கொள்ளவும். அடுப்பை அணைத்து, நல்லெண்ணெயை லேசாக ஸ்பிரே செய்து வறுத்த பொடியைத் தூவி நன்கு கிரேவியைக் கலக்கிப் பரிமாறவும். இதை ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் பரிமாறினால், புளித்தண்ணீரை மீன் உறிஞ்சி குழம்பின் சுவை அபாரமாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick