நாஞ்சில் நாட்டு கைமணம்!

ஹோட்டல் ரிவியூ

நாகர்கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது சுவையும் மணமுமான நாஞ்சில் நாட்டுச் சமையல்தான். அந்தச் சுவை மாறாமல் அப்படியே தயாரித்து அனைவருக்கும் விருந்தளித்து வருகிறது, ‘ஹோட்டல் ஆரிய பவன்’. சைவ உணவில் மண்ணின் வாசனையோடும், புதுப்புது யுக்திகளோடும் உணவு வகைகளைப் பரிமாறிவருவதால், மக்கள் மனதில் தனி இடம்பெற்று விளங்குகிறது, அண்ணா பேருந்து நிலையம் எதிரில் உள்ள இந்த ஹோட்டல். சுற்றுலாத் தலங்கள் அதிகம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான   நாகர்கோவில் அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளையும் தனது சுவையால் 47 ஆண்டு களாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

விசாலமான கார் பார்க்கிங் வசதியுடன் கலைநயம் மிகுந்த சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாசல் நம்மை வரவேற்கிறது.  உள்ளே நுழைந்ததும்் ஏதோ தியான மண்டபத்துக்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது. ஈஷா தியான மண்டபத்தின் லிங்க பைரவி காட்சிகள், மெல்லிய புல்லாங்குழல் இசை என நம் மனதை வருடுகிறது, ஹோட்டலின் சூழல். ஓவியர் மருதுவின் கைவண்ணத்தில் உருவான தமிழர் பண்பாடு, வீரத்தமிழர்களின் போர்த்திறமை ஆகியவற்றை பறைசாற்றும் கலைநயம் மிக்க ஓவியங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

ஹோட்டலின் உள்ளே டிஜிட்டல் எலெக்ட்ரானிக் போர்டில் அன்றைய ஸ்பெஷல் மெனுக்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick