மைக்ரோவேவ் அவன் ரெசிபிக்கள் | microwave oven Recipes - Aval Kitchen Vikatan | அவள் கிச்சன்

மைக்ரோவேவ் அவன் ரெசிபிக்கள்

டெக் - சமையல்சுவை புதிது

ஆலு பிந்தி மைக்ரோவேவ் தவா ஃப்ரை

தேவையானவை:

 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 2
 வெண்டைக்காய் -  7
 கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்குகளை உப்பு போட்டு வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். வெண்டைக்காயைக் கழுவி விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் தவாவில் எண்ணெய் ஊற்றி, மேலே சொன்ன அனைத்தையும் கலந்து, நான்கு நிமிடங்கள் ஹை பவர் மோடில் வைத்து, வெளியே எடுத்துப் பரிமாறவும். ஒருவேளை காய்கறி அதிகமான அளவாக இருந்து சரியாக வேகாமல் இருப்பதாகத் தோன்றினால், சிறிது எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் ஹை பவர் மோடில் உள்ளே வைத்து எடுக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick