நெய் சேர்க்காமல், ஓர் இனிப்பு | Cooking Questions and Answer - Aval Kitchen | அவள் கிச்சன்

நெய் சேர்க்காமல், ஓர் இனிப்பு

சமையல் சந்தேகங்கள்

“காய்கறிகளில் ஸ்வீட் செய்ய முடியுமா?”

“வெள்ளைப் பூசணிக்காய், சுரைக்காய், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், ஆகியவற்றைக் கொண்டு அல்வா செய்யலாம். இவற்றில் விருப்பமான காயைத் தேர்வு செய்து, இரண்டு கப் அளவுக்குத் துருவி எடுத்து, தண்ணீரை வடிகட்டி, பால் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, அதை அடி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கப் சர்க்கரை சேர்த்து, மிதமான சூட்டில் அல்வா பதம் வரும் வரை கிளறி, ஏலக்காய் பவுடர், ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கி, வறுத்த முந்திரி சேர்க்கவும்.

பீட்ரூட், முட்டைகோஸ் இவற்றின் சுவையும் மணமும் சற்று வித்தியாசமாக இருப்பதால், அவற்றை வேகவைத்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் 2 நிமிடங்கள் வதக்கிவிட்டு, பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். முட்டைகோஸ் குழைய வேகவில்லை என்றால், அதை மிக்ஸியில் சிறிது தேங்காய்த் துருவல், நான்கைந்து முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து, பிறகு கிளறலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick