இயற்கை உணவு - அடுப்பில்லா சமையல்!

''உணவு வகைகளில் எதை எடுத்துக் கொள்வது, எதைத் தவிர்ப்பது என்பதுபற்றி, எப்போதுமே குழப்பம்தான். அதிலும் இன்றைக்கு ஆளாளுக்குக் கிளம்பி வந்து, அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என நிறையவே குழப்புகிறார்கள். 'எப்படி உண்ண வேண்டும்... எந்தெந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?’ என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால், 'மருத்துவர் சொன்னார்’, 'நண்பர் சொன்னார்’ என்று நினைத்த நேரத்தில், நினைத்த உணவு வகைகளை உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு, பிறகு உடல் உபாதைகளால் அவதிப்படும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

இதேபோல 'இதில்தான் சத்து அதிகம்’ என ஒரே உணவையே தொடர்ந்து சாப்பிடுவதும் தவறு. அது, உண்மையிலேயே சத்தான உணவாக இருந்தாலும்... சமயங்களில் அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சுதான். எனவே, எப்போதும், எளிமையான, செரிமானத்துக்கு உகந்த, சரிவிகித சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதுதான் சரியான ஆரோக்கியம். இதைத்தான் நம் முன்னோர் அனுபவ அடிப்படையில் சொல்லி வைத்துள்ளனர்'' என்று டிப்ஸ் கொடுத்த 'இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல், இந்த இதழுக்கான இயற்கை உணவு வகைகளைச் செய்து காண்பித்தார்.

மிக்ஸ்டு புரூட்ஸ்!


தேவையானவை:

ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீச்சை, மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா - அனைத்திலும் சேர்த்து ஒரு கிலோ

தேன் அல்லது மண்டை வெல்லத்தூள் - 200 கிராம்

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

ஏலக்காய் தூள் - தேவையான அளவு

தேங்காய் - அரை மூடி (தேவைப்பட்டால்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick