40 வயது உணவுகள்!

''நாற்பது வயதில் நாய்க்குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்...'' என்று முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்ட பழைய சினிமா பாடல், இன்று 40, 45 வயதில் உள்ளவர்களின் மனதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். ஓடித்திரிந்த கால்களின் ஓட்டம் குறையத் தொடங்குவது; உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தைரியம் குறையத் தொடங்குவது, அனைத்தும் இந்த வயதில்தான். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள், மேடு பள்ளங்கள் அனைத்தும் இந்த வயதில் வெளிப்படுவதால்... மனதளவில் அயர்ச்சி, உடல் அளவில் தளர்ச்சி ஏற்படத் தொடங்கும். அதனால், ஏற்படும் கோபத்தைத்தான் 'நாய்க் குணம்’ என்கிறார்கள். உண்மையில் 'நா குணம்’ என்பதுதான் மருவி நாய்க் குணமாகி விட்டது. நாற்பது வயதானவர்கள், பக்குவப்பட்ட வார்த்தைகளைத்தான் பேசுவார்கள். அதாவது அவர்களின் நாவானது (நாக்கு), எதையும் அறிந்தே பேசும் குணம் கொண்டதாக மாறிவிடும் என்பதுதான் பொருள். அதேசமயத்தில் அந்த வயதில் நாக்குக்கு ருசியான, பக்குவமான உணவும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick