ஹோட்டல் ரிவியூ - மதுரை கெளரி கிருஷ்ணா!

புதுப்புதுப் பெயர்களில் விதம்விதமான உணவுகளுடன் கலர் ஃபுல்லான ஹோட்டல்கள் மாதம் ஒன்று என்கிற கணக்கில், மதுரையில் துவக்கப்பட்டு வந்தாலும், சில நாட்களிலேயே அந்த ஹோட்டல்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். காரணம், சாப்பாட்டுக் கூடத்தின் இன்டீரியர் டெகரேஷன், நாற்காலி மேஜை வடிவமைப்புகளில் காட்டும் அக்கறையை, உணவின் சுவையில் காட்டத் தவறி விடுவதுதான். ஆனால், மதுரை மக்களைப் பொறுத்தவரையில் சுவைக்கு அடிமையானவர்கள். சுவையான உணவு எவ்வளவு தூரத்தில் கிடைத்தாலும், தேடிப்போய் உண்பார்கள். அப்படி, மதுரை மக்கள் தேடிச்செல்லும் ஹோட்டல்களில் முக்கியமானது, பைபாஸ் சாலையில் இருக்கும் ஹோட்டல் கௌரிகிருஷ்ணா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick