சிங்கப்பூர் ரெசிப்பிகள்!

ஸ்பெஷல் ரெசிப்பி

சிங்கப்பூரில் வசிக்கும் ஜெயஸ்ரீ சுரேஷ், சமைப்பதில் வல்லவர். மதுரையைச் சேர்ந்த இவர், ஆறு ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தைகளோடு சிங்கப்பூரில் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 'ஜெயஸ்ரீஸ் கிச்சன்’ என்கிற பெயரில் வெப்சைட் (www.jeyashriskitchen.com) நடத்தி வருகிறார். அறுநூறுக்கும் மேற்பட்ட ரெசிப்பிகளை படைத்திருக்கிறார் இவர், ''சிங்கப்பூரில், வெஜிடேரியன்கள் அதிகமாக நேசிக்கும் நான்கு ரெசிப்பிகளை உங்களுக்காக இங்கே பரிமாறுகிறேன். டோஃபூ, பாக் சாய் கீரை, நூடூல்ஸ், முளைகட்டிய பச்சைப்பயறு, புரூக்கோலி இவை இல்லாமல் சிங்கப்பூர் மக்களின் உணவு அமையாது என்பதால், இவற்றைப் பயன்படுத்தி செய்யும் ரெசிப்பிகளாக தந்திருக்கிறேன்'' என்கிறார், ஜெயஸ்ரீ சுரேஷ் உற்சாகமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick