அள்ளுது ருசி! - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை! | Baby Corn Tasty Fry Recipe - Aval Kitchen | அவள் கிச்சன்

அள்ளுது ருசி! - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை!

ஸ்பெஷல் ரெசிப்பி

''நாங்க டாக்டர் குடும்பங்கிறதால ஆரோக்கியமான உணவுகள் பத்தி அடிக்கடி பேசிட்டே இருப்போம். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குப் போகும்போது அவங்க கொடுக்குற உணவுகளை, 'இன்னும் எப்படி சுவையானதா மாற்ற முடியும்?’னு யோசிச்சுட்டே இருப்பேன். ஹோட்டல்கள்ல சாப்பிடுற உணவுகளையும் அதே ருசியில ஆரோக்கியமா எப்படி சமைக்கிறதுனும் யோசிப்பேன். அந்த மாதிரி உணவுகளை நானே சமைத்து அலங்கரித்து அசத்திடுவேன்'' என்று உற்சாகமாக பேசும் கிருத்திகா ராதாகிருஷ்ணன், பல ஆண்டுகளாக சமையல் கலையில் அசத்தி வரும் 'ஃபுட் ஷோ ஹோஸ்டர்’. இவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மனைவி.

 ''இதுவரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துல 9 சமையல் புத்தகங்களை வெளியிட்டிருக்கேன். என்னோட சமையல் ஆர்வத்தைத் தூண்டி புத்தகங்கள் போடுற அளவுக்கு என்னை ஊக்குவித்தவர் என் கணவர்தான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பணி நெருக்கடி இருந்தாலும், என்னையும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவார். அப்பா நியூராலஜி டாக்டர்ங்கிறதால வீட்ல நியூட்ரிஷியன் சமையலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பீன்ஸ் பொரியலா இருந்தாகூட, 'காயோட பச்சை நிறம் மாறாம எப்படி சமைக்கிறது?’னு ஆராய்ச்சி செய்வோம். காய்கறி களை சத்துக்கள் அழியாமல் சமைக்குறதுக்காக விதவிதமா முயற்சி பண்ணுவோம். அந்த ஆர்வம்தான் சமையல் மேல இத்தனை ஈடுபாட்டைக் கொண்டு வந்து சேர்த்திருக்கு. ஹோட்டல்கள்ல மட்டும்தான் வாய்க்கு ருசியா  சமைக்க முடியுமா என்ன? அதை நம்ம வீட்ல இருந்தே ஆரம்பிக்கலாமே'' என்று சொல்லும் கிருத்திகா, செய்து காட்டிய டிஷ், ’பேபி கார்ன் டேஸ்ட்டி ஃப்ரை’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick