“Thank U அவள் விகடன் கிச்சன்!’’

சிலாகிக்கும் செஃப் பிரவீன் ஆனந்த்

ன்றைக்கு உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் கிச்சனே... ‘அவள் விகடன் கிச்சன்’ என்பதாக மாறி ஜொலிக்கிறது! இத்தகையப் புகழைச் சேர்த்திருக்கும் ‘அவள் விகடன் கிச்சன்’ இதழின் ஆண்டு விழா கொண்டாட்டம், ஜூலை 5- ம் தேதியன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஹட்சன் பனீர் மற்றும் சக்தி மசாலா நிறுவனங்கள் இணைந்து வழங்க, தானும் கைகோத்து நின்றது என்.ஏ.சி சில்வர்மைன் ஜூவல்லரி!

சென்னை, அடையார் பார்க் ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காலை 10 பத்து மணியிலிருந்தே விருந்தினர்கள் வரத்துவங்கினர். ‘அவள் விகடன் கிச்சன்’ இதழில் தங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவரும் இந்தியாவின் புகழ்பெற்ற சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் கவிதா, செஃப் பழனிமுருகன், செஃப் சேகர், செஃப் ராஜ்குமார், செஃப் பத்மநாபன், செஃப் பாலா, ரேவதி சண்முகம், மெனு ராணி செல்லம் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர். எழுத்தாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமா, டி.வி, எஃப்.எம் பிரபலங்கள், ஆன்மிகப் பிரமுகர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆண்டு விழா சிறப்பிதழாக, ‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் ‘பார்ட்டி ஸ்பெஷல்’ என்கிற வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த இதழை விகடன் பப்ளிஷர்ஸ் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வெளியிட, திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி முதலாவதாகப் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக கிரவுன் பிளாசா ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்