கறுப்புப் புளியின் நிறத்தை மாற்ற முடியுமா? | Cooking Question & Answer | அவள் கிச்சன்

கறுப்புப் புளியின் நிறத்தை மாற்ற முடியுமா?

சமையல் சந்தேகங்கள்!

“வீட்டிலேயே பழங்களைப் பழுக்க வைக்க முடியுமா?”

“தாராளமாக முடியும். முற்றி லேசாக மஞ்சள் நிறம் வர ஆரம்பிக்கும் வாழை, மா போன்ற பழங்களை ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்து, வாழைச் சருகுகளால் மூட வேண்டும். இத்துடன், நன்றாகப் பழுத்த எலுமிச்சை அல்லது சாத்துக்குடிப் பழங்களில் ஏதேனும் ஒன்றைப் போட்டு மூடி வைத்து விட்டால் 3, 4 நாட்களில் பழுத்து விடும். சாத்துக்குடி, எலுமிச்சைப் பழத்தில் இருந்து வரும் ஒருவித, ‘என்சைம்’ காயாக உள்ளவற்றைக் கனியாக்கி விடும். பழங்களும் ஒரே சீராகப் பழுத்து விடும். ஒருபுறம் கனிந்தும் ஒருபுறம் காயாகவும் இருக்காது. நமது தேவைக்கு ஏற்ப பழுக்கப் பழுக்க உபயோகித்துக் கொள்ளலாம். இதில் எந்தப் பக்க விளைவுகளும் இருக்காது. எல்லா பழங்களையும் இந்த முறையில் பழுக்க வைக்கலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick