‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! | Chef dhamyu, Kammankuzh | அவள் கிச்சன்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

கோயில் வாசல் கம்மங்கூழ்!ஓர் உண(ர்)வுப் பயணம்

ன்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு டிரிப்பும், ஒவ்வொரு அனுபவத்தைத் தந்துட்டேதான் இருக்கு. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்ன போயிட்டு வந்த மாசாணி அம்மன் கோவில் பத்தியும், அங்க குடிச்ச கம்மங்கூழ் பத்தியும் இந்த இதழில் பேசப்போறேன்...

பொள்ளாச்சி பக்கத்துல உள்ள மாசாணி அம்மனைக் கும்பிட்டு வரணும்கிறது ரொம்ப நாளா மனசுக்குள்ள ஓடிட்டே இருந்த விஷயம். நேரம் அமையவே, சில வாரத்துக்கு முன்ன சென்னையில இருந்து கோவைக்கு ஃப்ளைட்ல போய், அங்கிருந்து கார்ல பொள்ளாச்சி போனேன். காலையிலயே கிளம்பிட்டதாலே, புல்வெளிப் பனித்துளிகளை ரசிக்கறதுக்காக வழியில காரை நிறுத்தினேன். என்னா அழகு, அமைதி... சொர்க்க பூமிதான் இந்த பொள்ளாச்சி. அந்தப் பனித்துளியை எடுத்து மெதுவா கையில விட்டு ரசிச்சுக்கிட்டே நின்னேன். மறுபடியும் கார்ல ஏறி வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு எல்லாத்தையும் வழிநெடுக ரசிச்சிக்கிட்டே போனேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick