சமையல் சோடா, பேக்கிங் சோடா, என்ன வேறுபாடு?

விஜயலஷ்சுமி ராமாமிர்தம்

‘‘சமையல் சோடா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றுக்கு என்ன வேறுபாடு? இவற்றை எப்படி உபயோகிக்கலாம்?’’

“சமையல் சோடா, பேக்கிங் சோடா இரண்டும் ஒன்றுதான். இது, சுத்தமான சோடியம்-பை-கார்பனேட். இதை மாவில் கலந்தவுடன் பலகாரங் களைச் சுட்டு விட வேண்டும். தாமதித்தால், அதிக பலன் இருக்காது. நீர்ப்பசையுடன் இருக்கும் மாவில், இவை சேர்க்கப்படும்போது அதிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே கொண்டு வந்து, பலகாரங்களை (பஜ்ஜி, பாதுஷா போன்றவை) உப்பச் செய்கின்றது.

பேக்கிங் பவுடரில் சோடியம்-பை-கார்பனேட்டுடன், ஒரு வித மாவுச்சத்தும் சேர்க்கப்பட்டிருக்கும். கேக், பிரட் முதலியன செய்ய பேக்கிங் பவுடர் உபயோகிப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick