காமாட்சி மெஸ்...

தொகுப்பு, படங்கள்: கே.குணசீலன்

நாம் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் அங்கு காணும் இடங்கள் நம் நினைவில் நீங்காமல் இருப்பது போல... அந்த ஊரில் உண்ணும் உணவின் சுவையும் எண்ணத்தை விட்டு மறையாது. பாடல்கள் மூலம் காதுக்கும் மனதுக்கும் விருந்தளித்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். உணவு மூலம் நாவுக்கு விருந்தளித்து வருகிறது, பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்.

பட்டுக்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள இந்த மெஸ், சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசைவப் பிரியர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்போது, புதிய கிளை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வழியாக பயணிக்கும் பகுதிவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளில் பலரும் இந்த மெஸ்ஸில் கை நனைப்பதை வாடிக்கையாகவே வைத் துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick