‘சர்க்கரை’ உணவுகள்!

எஸ்.கதிரேசன், படங்கள்: வீ.சிவக்குமார், ரா.வருண் பிரசாத்

இன்சுலின் சுரப்புக் குறைபாடு (சர்க்கரை நோய்) உள்ளவர் களுக்கான உணவு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல், உடல் நலனைப் பாதுகாக்கும் விதங்கள் பற்றி ‘டயட் டீசியன்’ குந்தலா ரவி ஆலோசனைகளை வழங்குகிறார்.

‘‘சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் இருக்கிறது. நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் முன்பெல்லாம் இந்நோய் வரும். இப்போது வயது குறைந்தவர் களுக்குக்கூட வரத் தொடங்கி விட்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்வதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. வளரும் இந்தியாவில் இது தலையாயப் பிரச்னையாக உள்ளது. சர்க்கரை நோய் வருவதற்கு பரம்பரை, வாழ்க்கை முறை மாற்றம், மனஅழுத்தம், நகரம் சார்ந்த பரபரப்பான வாழ்க்கை... என பல காரணங்கள் இருந்தாலும், சாப்பாடு, அதன் அளவு மற்றும் உணவுப்பழக்க வழக்கம் ஆகியவையும் முக்கியக் காரணியாகும். நாம் வாழும் வாழ்க்கை முறையை, பணிச்சூழல் காரணமாகவும் வேறு சில வாழ்வியல் காரணங்களாலும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், உணவுப் பழக்கத்தை எளிதாக மாற்றிக்கொள்வதன் மூலம், சர்க்கரையின் அளவு உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick