கேட்டரிங் ஆலோசனைகள்!

திருமணம் போன்ற விழாக்களில் உபசரிப்பையும், விருந்தையும்தான் முக்கியமாகக் கவனிப்பார்கள் விருந்தினர்கள். உபசரிப்பை, விழா நடத்தும் வீட்டுக்காரர்களே நல்லபடியாக செய்து விட முடியும். ஆனால், விருந்து? இந்த விஷயத்தில் சொதப்பாமல் இருப்பது பற்றி சில டிப்ஸ்களை இங்கே பகிர்கிறார், திருச்சியைச் சேர்ந்த பிரபல ‘செஃப்’ பழனிமுருகன்.

‘‘கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில் உறவினர்களே திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள். அதனால், சமைக்க தனி ஆட்கள் தேவைப்படவில்லை. ஆனால், இன்று அப்படியில்லை. நாகரிக காலத்தில் மேரேஜ், ரிசப்ஷன் என்று திருமணத்தை இரண்டு நாட்களாகப் பிரித்து விட்டோம். அதோடு  நான்கு வேளை உணவளிக்க வேண்டிய கட்டாயம். அதனால், மெனுவையும், சமைப்பவர்களையும் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்” என்ற பழனிமுருகன், டிப்ஸ்களை அடுக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick