சரியான உடல்வளர்ச்சிக்கு, சரிவிகித உணவு | Natural food, Rathina sakthivel | அவள் கிச்சன்

சரியான உடல்வளர்ச்சிக்கு, சரிவிகித உணவு

இயற்கை  உணவு

'இன்று, பெரும்பாலும் உணவுகளில் கட்டுப்பாடு இல்லாமல் பலரும் உண்டு வருகின்றனர். இதனால், 'ஒபிசிட்டி’ எனப்படும் உடல்பருமன், புரதச்சத்து அதிகமாதல், நீரிழிவு போன்ற பலதரப்பட்ட நோய்கள் வரிசைக்கட்டி வாசலில் வந்து நிற்கின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்களே என்பதற்காக பத்திய உணவு சாப்பிடுவார்கள் சிலர். 'இரண்டே நாட்களில், ஒரு வாரத்துக்குள் உடல் எடையைக் குறைக்கலாம்’ என்று வரும் விளம்பரங்களைத் தேடி ஓடுவார்கள் பலர். உடல்சார்ந்த நிவாரணம் என்பது படிப்படியாக நடக்கிற செயல்முறை. எனவே, இரண்டு நாட்களுக்குள், ஒரு வாரத்துக்குள் உடல் எடை குறைக்கவேண்டும் என்கிற அபத்த யோசனைகளை விட்டுவிட்டு, சரிவிகித உணவுக்கு மாறுங்கள். உடலுக்கான ஆரோக்கியத்தைப் பெறுங்கள்!'' என்ற ஆலோசனையோடு, கீழ்க்காணும் இயற்கை உணவு வகைகளை தயாரிப்பதற்கான வழிமுறைகளை இந்த இதழில் சொல்கிறார் 'இயற்கைப்பிரியன்’ இரத்தின சக்திவேல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick