குடும்ப உணவுக்கு, குஷியான குறிஞ்சி! | Guru Hotel reviews | அவள் கிச்சன்

குடும்ப உணவுக்கு, குஷியான குறிஞ்சி!

காவிரி பாயும் கவின் மிகு திருச்சி மாநகர்,  கிட்டத்தட்ட  தமிழகத்தின் மையப்பகுதி என்பதால், பல ஊர்களுக்கு செல்பவர்கள் திருச்சியைக் கடக்க வேண்டியிருக்கும். தவிர, திருவானைக்கோவில், ரங்கம், சமயபுரம், திருப்பட்டூர்... என புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களும் ஊரைச் சுற்றி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குவியும் ஊர் இது. அப்படி வந்து குவிபவர்களுக்கு 40 ஆண்டுகளாக சுவையான சத்தான உணவை வழங்கி வருகிறது,  மத்தியப் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் குரு ஹோட்டலின் ‘குறிஞ்சி ரெஸ்டாரெண்ட்’.  இந்நிறுவனம் அளிக்கும் சுவையான உணவுக்காகவும், கனிவான சேவைக்காகவும் திருச்சி மட்டுமல்லாது, பல வெளியூர்க்காரர்களும் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick