கனவாய் மீன் வருவல்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம்

‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய் மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத்தான் இந்த முறை உங்களுக்குச் சொல்றேன்.

கனவாய் மீன் வறுவல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick