மாவிளக்கு தயாரிப்பது எப்படி? | Cooking Question & Answers - Aval Kitchan | அவள் கிச்சன்

மாவிளக்கு தயாரிப்பது எப்படி?

சமையல் சந்தேகங்கள்

கோயில்களில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைப்பதற்காக, மாவிளக்கு போடுவது வழக்கம். அந்த மாவிளக்கை ஒரு வாரம் வரை வைத்திருந்து, பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

அரை கிலோ பச்சரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை நிழலில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் மிக்ஸியில் நைஸாக அரைத்து, வெல்லம் சேர்த்து 4 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றிப் பிசையவும் (துளிகூட நீர்விடக் கூடாது. வெல்லத்தில் உள்ள ஈரம், நெய்யில் உள்ள ஈரம் மட்டுமே போதும்). பிசைந்த மாவை உருட்டி மாவிளக்காகப் போடவும். இந்த மாவிளக்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் வரை கெடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick