சூப்பரான சூப் ரெசிப்பிக்கள்

ழைக்காலம் ஆரம்பிக்க போகிறது. மழையை ரசித்துக்கொண்டே, ‘வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு சூப் செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமே’ என்று தோன்றுகிறதா? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே சூப்பாரான ‘சூப்’ ரெசிப்பிக்களைப் பகிர்ந்து கொள்கிறார், சென்னை `ஹனி ஸ்பைஸ் பேமிலி ரெஸ்டாரன்ட்டின்’ எக்ஸிகியூட்டிவ் செஃப் பாலா.

ரெசிப்பிகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை வைத்து செய்தால் ஆறு பேர் சாப்பிடும் அளவு
சூப் கிடைக்கும்.

முருங்கைக்காய்ச் சாறு

தேவையானவை:
 பிரிஞ்சி இலை - 10 கிராம்
 மிளகு - 15 கிராம்
 ஏலக்காய் - 5 கிராம்
 கிராம்பு - 5 கிராம்
 சோம்பு - 10 கிராம்
 பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழைத் தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 25 கிராம்
 முருங்கைக்காய் - 2 காய்
    (விருப்பமான நீளத்தில் நறுக்கவும்)
 பூண்டு - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பாசிப்பருப்பு - கால் கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 தக்காளி - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - 10 கிராம்

செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு  சேர்த்துத் தாளிக்கவும். இதில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழைத்தண்டு, பூண்டு, கறிவேப்பிலை முருங்கைக்காய், பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள், உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு இதை வடிகட்டி எடுத்து ஒரு பவுலில் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


கொள்ளு மிளகு ரசம்

தேவையானவை:
 பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பிரிஞ்சி இலை - 10 கிராம்
 முழு மிளகு - 15 கிராம்
 ஏலக்காய் - 5 கிராம்
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 கிராம்பு - 5 கிராம்
 கொத்தமல்லித்தழைத்தண்டு - கால் கிலோ (பொடியாக நறுக்கி வைக்கவும்)
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
 கறிவேப்பிலை - 25 கிராம்
 பூண்டு - 50 கிராம்
 கொள்ளு - 100 கிராம்
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 சோம்பு - 10 கிராம்
 தக்காளி - 700 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - 10 கிராம்
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

செய்முறை:
கொள்ளுப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் புதுத் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, பிரிஞ்சி இலை, மிளகு, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

இத்துடன் கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து கரைய வதக்கவும். இதில் சோம்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் வேகவைத்த கொள்ளுப் பயறைச் சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்ததும், வடிகட்டி சாறு எடுத்து தனியாக ஒரு பவுலில் ஊற்றவும். இதில் கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், கொள்ளுப்பயறைச் சேர்த்து பரிமாறவும்.


தூதுவளை துளசிச் சாறு

தேவையானவை:
 தூதுவளை இலைகள் - 100 கிராம்
 துளசி - 100 கிராம்
 ரசப்பொடி - 25 கிராம்
 பெருங்காயத்தூள் - 10 கிராம்
 புளி - 15 கிராம் (வடிகட்டி சாறு எடுக்கவும்)
 கொத்தமல்லித்தழைத்தண்டு - 1 கட்டு (பொடியாக நறுக்கி வைக்கவும்)
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 100 மில்லி
 கடுகு - 15 கிராம்
 உளுத்தம் பருப்பு - 15 கிராம்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
 பெரிய வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மிளகு - 25 கிராம்
 சீரகம் - 25 கிராம்
 பூண்டு - 25 கிராம்
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - 10 கிராம்

செய்முறை:
தூதுவளை இலைகளைச் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து மைய வதக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் தூதுவளை, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக ரசப்பொடி, பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி, ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது தூதுவளை, துளசி இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.


நாட்டுக்கோழி ரசம்

தேவையானவை:
 கோழிக்கால் - அரை கிலோ
 பூண்டு - 5 கிராம்
 மிளகு - 15 கிராம்
 ஏலக்காய் - 5 கிராம்
 சோம்பு - 10 கிராம்
 பிரிஞ்சி இலை - 10 கிராம்
 பெரிய வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 கிராம்பு - 5 கிராம்
 கொத்தமல்லித்தழைத்தண்டு - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
 கறிவேப்பிலை - 25 இலைகள்
 சீரகத்தூள் - 15 கிராம்
 பாசிப்பருப்பு - 100 கிராம்
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - 10 கிராம்
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

செய்முறை:
கோழிக்காலை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் கோழிக்காலை சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வேக விடவும். கோழிக்கால் பாதி வெந்ததும், பாசிப்பருப்பைக் கழுவி தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து 45 நிமிடம் வேக விட்டு வடிகட்டி இறக்கி ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது சீரகத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். விருப்பம் உள்ளவர்கள் கோழிக்காலில் இருக்கும் வெந்த சதைப்பகுதியை எடுத்து, சூப்பில் சேர்த்துப் பரிமாறலாம்.


கடல் நண்டுச் சாறு

தேவையானவை:
 பெரிய வெங்காயம் - 250 கிராம்
 பிரிஞ்சி இலை - 5 கிராம்
 மிளகு - 10 கிராம்
 ஏலக்காய் - 5 கிராம்
 கிராம்பு - 5 கிராம்
 கொத்தமல்லித்தழைத்தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 தனியாத்தூள் - 15 கிராம்
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 கறிவேப்பிலை - 25 கிராம்
 பூண்டு - 50 கிராம்
 பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 சீரகத்தூள் - 15 கிராம்
 நண்டு - 10
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 நண்டின் சதைப்பகுதி - 100 கிராம்
 சோம்பு - 10 கிராம்
 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 வெண்ணெய் - சிறிது
 மஞ்சள்தூள் - 10 கிராம்

செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, மிளகு, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, பூண்டு, பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நண்டை நன்றாகக் கழுவி சதைப்பகுதியுடன் நன்கு இடித்து வைக்கவும். இதை தாளித்தவற்றோடு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தக்காளி கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து மைய வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் கொதிக்க விடவும். இந்த தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் இட்டு சூடானதும், நண்டின் சதைப்பகுதியைச் சேர்த்து பச்சை வாசனை போக வேகும் அளவுக்கு லேசாக வதக்கவும். இதைப் பரிமாறும் போது சூப்பில் சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.


ஆட்டுக்கால் சூப் / பாயா

தேவையானவை:
 பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பிரிஞ்சி இலை - 10
 மிளகு - 15 கிராம்
 ஏலக்காய் - 5 கிராம்
 கிராம்பு - 5 கிராம்
 சோம்பு - 10 கிராம்
 பூண்டு - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 25 கிராம்
 மிளகாய்த்தூள் - 20 கிராம்
 கொத்தமல்லிதழைத்தண்டு - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
 பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 சீரகத்தூள் - 15 கிராம்
 ஆட்டுக்கால் - அரை கிலோ
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - 10 கிராம்

செய்முறை:
ஆட்டுக்காலை தீயில் நன்கு முடிகள் கருக பொசுக்கி, மஞ்சள்தூள் தேய்த்து இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஏழு விசில் விட்டு வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழைதண்டைச் சேர்த்து வதங்கியதும், வெங்காயம்தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் வேக வைத்த ஆட்டுக்காலை அதன் தண்ணீரோடு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது ஆட்டுக்காலுடன், சீரகத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

- அதிதி, படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick