சமையல் சந்தேகங்கள்

வீட்டிலேயே வெண்ணெய் தயாரிப்பது எப்படி?

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சிம்மில் வைக்கவும். சில நிமிடங்களிலேயே  பாலின் மேல் திக்கான ஏடு படியும். இந்த ஏடைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, பாலை உபயோகித்துக்கொள்ளலாம். தினமும் இவ்வாறு சேகரிக்கும் ஏடை ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு வாரம் வரை சேர்க்கலாம். இப்படி சேர்ந்த ஏடை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு ஸ்பூன் தயிரை ஊற்றி வைக்கவும். 6 மணி நேரம் கழிந்ததும், அது நன்றாக உறைந்திருக்கும். இதை ஒரு பாட்டிலில் போட்டு பாட்டிலின் மூடியை மூடிவிட்டு நன்றாகக் குலுக்கவும். குலுக்கக் குலுக்க வெண்ணெய் நன்றாகத் திரண்டு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்