கிச்சன் கைடு! | Kitchen Guide - Aval Kitchen | அவள் கிச்சன்

கிச்சன் கைடு!

சிலிண்டர் வாங்கும்போது, அதன் காலாவதியாகும் தேதியைக் கவனிக்க வேண்டும். அதாவது ஒரு சிலிண்டரை எத்தனை ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்ற குறிப்பு சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஏ.பி.சி. மற்றும் டி என ஆங்கில எழுத்துக்களில் அகர வரிசையில் குறிக்கப்பட்டிருக்கும். இத்துடன், 2 இலக்க எண்ணும் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துக்கள் மாதத்தைக் குறிக்கக்கூடியவை.

உதாரணமாக ‘ஏ’ என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை ‘முதல் காலாண்டு’ என்று அர்த்தம், ‘பி’ எனக் குறிக்கப்பட்டு இருந்தால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், ‘சி’ என்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், ‘டி’ என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உள்ள கால அளவைக் குறிக்கும். சிலிண்டரில் பி-16 எனக் குறிக்கப்பட்டு இருந்தால், ஜூன்
2016-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரை பயன்படுத்தலாம் என்று அர்த்தம். இந்த செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட சிலிண்டரில் பி.15 என்று இருந்தால், அது ஜூன் - 2015 உடன் காலாவதியான சிலிண்டர் என்று அர்த்தம். இதைப் பயன்படுத்துவது ஆபத்தானது. உடனே கேஸ் ஏஜன்சியைத் தொடர்பு கொண்டு சிலிண்டரை மாற்றவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick