இயற்கை பானத்தில் உண்டு இணையற்ற பலன்கள்!

இயற்கை உணவுகள்எளிமை - இனிமை

ழங்கள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் எண்ணிலடங்காதவை. பொதுவாகவே மருத்துவர்கள், `உங்கள் உணவுகளை கலர்ஃபுல்லாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றுதான் அறிவுரை ஆரம்பிப்பார்கள். நாம் பலரும் கலர்ஃபுல் என்பதற்கு வேறு ஒரு அர்த்தத்தை எடுத்துக்கொண்டு, பீட்சா, பர்கர் என்று வெளுத்துக்கட்டுகிறோம். உடல் நலத்தை இழந்து பல நோய்களுக்கு ஆட்படுகிறோம்.

முன்னோர்கள் பலரும் சொல்லிவைத்த மூலிகைச்சாறுகள் பலவும் இப்பொழுது காஸ்ட்லியாக டேபிளில் வைக்கப்படுகின்றன. நோய் விரட்டியாக பங்காற்றக்கூடிய இந்த காய்கறி மற்றும் மூலிகைச் சாறுகளை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்ய முடியும், அவை தரும் பயன்கள் என்னென்ன என்பது பற்றித்தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்’’ என்று ஆரம்பித்த ‘இயற்கைப்பிரியன்’  இரத்தினசக்திவேல், ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick