கீரையை மூடி போட்டு சமைக்கலாமா?

சமையல் சந்தேகங்கள்

கீரைகளைச் சமைக்கும் போது தட்டு போட்டு மூடி சமைக்கலாமா? இதனால் சத்துக்கள் வீணாகுமா? முழுமையான சத்துக்கள் கிடைக்க வழி கூறுங்கள்.

கீரைகள் வளரும் போது பல்வேறு ரசாயனப் பொருட்களை கிரகித்துக் கொள்கிறது. கீரையை வேக வைக்கும் போது அந்த சூட்டில் நீராவியோடு தேவையற்றவை வெளியேறி விடும். எனவே கீரையைச் சமைக்கும் போது பாத்திரத்தைத் திறந்து வைத்து சமைப்பதுதான் நல்லது.

குக்கரில் சாம்பார் வைக்கும் போது சில சமயங்களில் ‘வெயிட் வால்வ்’ வழியாக மசாலா பொங்கி விடுகிறதே? இதை எப்படித் தவிர்க்கலாம்?

சில சமயங்களில் அரிசி போன்ற திடப்பொருட்கள் வால்வின் வாயிலை அடைத்துக்கொள்ளும். இதனால் மசாலா வெளியே வந்திருக்கும். இதைத் தவிர்க்க தட்டை வைத்து மூடலாம். வெயிட் வால்வை அடைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்