பத்திய சமையல்

யிற்றில் ஏற்படும் கிருமித் தொல்லைகளை நீக்கவும், காய்ச்சல் கண்டவர்களுக்குமான எளிதான ரெசிப்பிக்களைத் தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இல்லத்தரசி பாஞ்சாலி.

கொழுந்து உருண்டை

தேவையானவை:
 எள் - கால் கிலோ
 கருப்பட்டி - கால் கிலோ (நொறுக்கிக் கொள்ளவும்)
 வேப்பங்கொழுந்து - 6 இலை
 பொரிகடலை - 50 கிராம்
 வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
 நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் படபடவென வெடிக்கும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும். ஆற வைத்த எள், கருப்பட்டி, பொரிகடலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். விரல்களில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு அரைத்தவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைத்தால், கொழுந்து உருண்டை ரெடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்