ஹோட்டல் ரிவியூ - பாரம்பர்ய செட்டிநாட்டு உணவு - ஸ்ரீ பிரியா மெஸ்!

ந்தியாவில் எந்த நகரத்துக்குச் சென்றாலும், சின்ன ஹோட்டல் முதல் பெரிய ஸ்டார் ஹோட்டல் வரை ‘செட்டிநாடு உணவு கிடைக்கும்’ என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.

செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, அசைவ உணவு விரும்பிகளுக்கு நாக்கு சப்புக்கொட்டத் துவங்கிவிடும். நெல்லை, மதுரை, திண்டுக்கல் என உணவுக்கென்று தனிஅடையாளம் பெற்ற ஊர்கள் பல இருந்தாலும், செட்டிநாட்டு உணவுக்கென்று தனித்த வரலாறு உண்டு. அந்த வகையில் நாம் சென்றது காரைக்குடி ‘ஸ்ரீ பிரியா மெஸ்’க்கு.

47 வருட பாரம்பர்ய ஹோட்டல். சாப்பாட்டு மணம், அந்தத் தெருவில் நுழைந்ததுமே நம்மை வரவேற்கிறது. ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிலான டைனிங் ஹால். கூட்டமாக இருக்கிறதென்று யாரும் வேறு ஹோட்டலுக்குச் செல்வது கிடையாது. வாசலில் காத்திருக்கிறார்கள். காலை, இரவு டிபன் கிடையாது. மதிய சாப்பாடு மட்டும்தான். மதியம் 12 மணிக்கே ஆட்கள் வரத்துவங்கிவிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்