உணவு... நம்பிக்கைகளும் உண்மைகளும்!

சிறு சிறு உடல் உபாதைகளுக்கு எல்லாம் மருத்துவமனையை நாடாமல் சமையலறையை நம்புவர்கள் ஏராளம். வெந்தயம், சீரகம், வெங்காயம் என உணவுப் பொருட்கள்தான் அவர்களுக்கு மருந்து. ஆனால், சில உணவுகள், உணவு முறைகள் குறித்த தவறான புரிதல்கள் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றைக் களையும் விழிப்பு உணர்வுத் தகவல்களைத் தருகிறார், ஈரோடு, ‘கேர்24’ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் ப்ரியா!

பழமும் பழரசமும் ஒன்றில்லை!

நம்பிக்கை:
ஃப்ரூட் ஜூஸ் குடிப்பது, பழம் சாப்பிடுவதற்கு நிகரானது.

உண்மை:
பழங்களை அப்படியே சாப்பிடும்போது, அதிலுள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். ஆனால், அவற்றை ஜூஸாக்கிச் சாப்பிடும்போது, நார்ச்சத்துகள் வெளியேறிவிடும். அதேபோல, பழமாகச் சாப்பிடும்போது, அதிலுள்ள குளுக்கோஸின் அளவு குறைவாக இருக்கும். ஆனால், அதை ஜூஸாக்கும்போது அதில் குளுக்கோஸின் அளவு கூடும் என்பதால், அது நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும். மேலும், ஜூஸில் கலோரியின் அளவும் கூடும் என்பதால், சர்க்கரைத் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டு, உடலின் ஆற்றலை அதிகளவில் இழக்கவும் நேரிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick