வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது? | How to make BUTTER - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

ம்மா, அம்மாச்சி என ஆரம்பித்து பல தலைமுறைகளின் சமையல்களை, அவர்கள் அதில் புகுத்திய ஆரோக்கியத்தை படிப்படியாக இழந்துவருகிறோம். அவற்றில் ஒன்றான மத்தால் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த நுட்பத்தையும் கூடதான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் பாரம்பர்யத்தை மறக்காமல் சுத்தமான வெண்ணெயை வீட்டிலேயே கடைந்து எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஈரோட்டைச் சேர்ந்த குடும்பத்தலைவி ஈஸ்வரி வீட்டிலேயே வெண்ணெய் எடுப்பவர். ஒரு காலை வேளையில் அவர் வீட்டுக்கு விசிட் அடித்தோம். மண் பானையில் நிறைந்திருந்த தயிரை மத்துக்கயிற்றால் நுரை பொங்கப்பொங்க... சர்ர்ர்..சர்ர்ர் என்று கடைந்து கொண்டிருந்தார் ஈஸ்வரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick